Monday, June 02, 2008
நீ, நான், காதல்...(குறுந்தொடர்)
3.ஊடல்காலம்:
அவன்:
வண்ணம்கொண்ட மேகமே!
நீ கோபம் கொண்ட
காரணத்தால்,
வானவில்கூட
கறுப்புவெள்ளையாகிப் போனதடி!
அவள்:
சில்லென்ற மழையால்
என்னுள்ளம் நனைத்தவன்
சொல்லொன்று தவறியதால்
சில்லுச் சில்லாய்போனதடா என்
இதயம்.
அவன்:
பார்த்தும் பார்க்காமல்
விறுவிறுவென்று என்னைக்
கடந்து போய்விட்டாய்..
தவிப்பைக் கற்றுத்தந்த
காதல் இன்று
தவிர்த்தலையும்
கற்றுத் தந்ததடி!
அவள்:
உன்னைப் பார்த்துவிட்டு
பார்க்காததுபோல்
கடந்து வந்துவிட்டேன்.
உன்னைக் கடந்தபோது
ஜெயித்த என் பிடிவாதம்,
கடந்துவிட்டபின் தோற்றுப்
போய் யாருமறியாமல்
விசும்ப ஆரம்பிக்கிறது.
அவன்:
கோபத்தில் சொல்லக்கூடாத
வார்த்தையொன்றை
சொன்னதற்காக என்
கன்னத்தில் நீ அடித்திருக்கலாம்.
காயத்துடன் முடிந்திருக்கும்.
இதயத்தில் அடிக்கிறாய்,
இமைக்கவும் முடியாமல்
தவிக்கிறேன் நான்.
அவள்:
சீதாயணம் பாடிய
இதழ்களால்
ஏன்
சீதையை துளைத்தன
ராமனின் சொல்லம்புகள்?
அவன்:
மரணதண்டனையை
விட கொடியது
காதலி
உன் மெளனதண்டனை.
அவள்:
அழுகின்ற கண்களிடம்
சொல்லிவிட்டேன்
அவனுக்காக அழவேண்டாமென்று.
கண்களின் அழுகை நின்றபின்பும்
கேட்கிறது இதயத்தின்
விசும்பல்சப்தம்...
அவன்:
மன்னித்துவிட்டு மலரென
மலர்ந்துவிடுவாய் என்றெண்ணியே
மலர்கின்றன என் காலைப்பொழுதுகள்.
சுடுகின்ற நிலவின்பார்வையில்
சருகாகி வீழ்கின்றன என்
மாலைப்பொழுதுகள்.
அவள்:
நிலவும் சுடுமென்று
நீயும் உணரவேண்டும்;
சித்திரப்பாவை என்
சுயமும் நீ உணரவேண்டும்;
மன்னித்துவிட்டேன் உன்னை,
மலராகி உன் மடியில்
விழுகிறேன் ஓடோடிவா!
4.பிரிவுக்காலம்
(தொடரும்)
Labels:
குறுந்தொடர்
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
வார்த்தைகளே இல்லை பாராட்டுவதற்கு... மொத்த கவிதையும் அற்புதம்..
அழகு.. மிக அழகு.. கவிதை..
"(4.பிரிவுக்காலம்)"
பிரிவு காலத்திற்கு பின் சேர்த்து வையுங்கள் அவர்களை..
கவிதை வடிவம் புதிதாகவும் , அழகாகவும் உள்ளது.
ஊடல்காலம் அருமை.. வாழ்த்துகள்
Hi,
Really very good....
Thanks
Praharika
Really superb....contd
Really superb, contd....
Hi Friend,
this is Amzath. Remember me we worked in wipro. I knew you are good in writing poem. But I really I wondered you had these many posts on fans on the net. All you wrote are amazing. All the best.
அனைத்து கவிதைகளும் அருமை, அற்புதம். பிரிவுக்காலத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
பிரியா.
Really wonderful poem, thanks
really mind blowing... words are beautiful...
stunning! keep it up.
Post a Comment