Monday, June 30, 2008

பைத்தியக்காரி

விண்ணிலிருந்து
இறங்கி கோதுமை நிற பாதங்களால்
வீதியெங்கும் ஓடி ஆடும் தேவதையாக..

கருமை நிற
இருளை முத்தமிடும் மின்மினிகளின்
பின்னால் ஓடுகின்ற சிறுமியாக..

ஊரறிய சரடுகட்டிய துணைவன்
பரிசளித்த முத்தங்களின்
ஈரத்தை வருடுகின்ற மனைவியாக...


கிழிந்து தொங்கும்
ஆடைகள் பற்றிய கவனிப்புகளின்றி
ஒவ்வொரு பேருந்தின்
சன்னலுக்கும் தட்டை உயர்த்திப் பிடிக்கும்
அவளின்
உறக்கத்தில் இவர்களையொத்த
ஆயிரம் கனவுகள் குறும்புன்னகையாய்
மலர்கிறது

5 comments:

said...

வலி நிரம்பிய கவிதை..

said...

நண்பரே உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை.....
உங்களால் மட்டும் எப்படி இவ்வாறெல்லாம் எழுத முடிகிறது
நாங்களும் தான் யோசிக்கிறோம் இப்படி எழுத,ஆனால் முடியவில்லை
நண்பரே.ஏதாவது யோசனை கூறுங்கள்...

நேரம் இருக்கின்ற பொது என்னுடைய சிறு கவிதைகளையும் பாருங்கள்...

ravishna.blogspot.com

நன்றியுடன்,
--ரவிஷ்னா...

Anonymous said...

yosikka vakkira vaarhaigal...

said...

மிகவும் அருமை நிலா ரசிகரே.
யாரும் பார்த்திறா புதிய நோக்கு!
இன்னும் நிறைய எழுதுங்கள்!

said...

ungal kavithaigal anaiththilume enakku migavum pidiththathai irukirathu intha kavithai.