Monday, July 28, 2008

என் கறுப்புத்தங்கத்திற்கு...



1.உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்.

2.அடிபட்டு விழுந்த
பறவையென துடிதுடிக்கிறது
என் சிறகுகள்.
எவ்வித சலனமின்றி
காற்றோடு பயணிக்கிறது
உன் சிறகுகள்.

3.கடும் கோடையிலும்
ஈரமாகத்தானிருக்கிறது
என் தலைமுடி பற்றி
இழுத்தணைத்து நீ
தந்த ஒற்றைமுத்தம்

4.நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.

5.வேட்டை நாயின்
வாயில் சிக்கிய முயலாய்
இரவு என்னைக்
கவ்விக்கொள்கிறது
உதிரமென வடிகிறது
கண்ணீர்.

16 comments:

said...

//நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.//


அருமை....!

said...

/உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்./

அருமை

said...

கவிதை மிக அருமை....!

said...

நீ பிரிந்த நாளில்
எனக்கென்று ஒரு
பிரபஞ்சம் உருவானது..
அங்கே என்னைத் தவிர
யாருமில்லை.......

காதல் தோல்வி...... தனிமை.......
அற்புதமான பிரதிபலிப்பு.

said...

VERY NICE NILARASEEGAN.
KEEP IT UP.

--RAVISHNA.BLOGSPOT.COM

--RAVISHNA

said...

//உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்.//

ரொம்ப அழகான வரிகள்...மனதில் நின்றன...
அன்புடன் அருணா

said...

பாராட்டவோ அல்லது குறிப்பிட்டு சொல்லவோ, என்னிடம் வார்த்தைகளே இல்லை.

அத்தனையும் அருமை.. மிக சிறப்பான கவிதைகள்..

மனசு கனக்கிறது..
i'm speechless..

Anonymous said...

Ithu varai paditha kavithaigalil
miga chirantha,
nenjai thulaitha,
Enna solla....
En manam kavardha
Kavithai.

Superb!!!!

said...

//உன்னோடு வாழ்வதற்கும் உன் நினைவோடு வாழ்வதற்கும் சிறு வித்தியாசம்தான்... உன்னோடு வாழ்தல் வரம். உன் நினைவோடு வாழ்தல் தவம்.
//
காதலி கிடைத்தால் வரன் இல்லை என்றால் தவம்..... ஆகா காதலில் தோல்வி என்பதே கிடையாதுன்னு சொல்ல வர்றீங்க. சூப்பர்

said...

வாழ்த்திய அன்பர்களுக்கு நன்றி.

said...

//உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு வாழ்வதற்கும்
சிறு வித்தியாசம்தான்...
உன்னோடு வாழ்தல்
வரம்.
உன் நினைவோடு வாழ்தல்
தவம்.//

தவமான வரம் அழகா இருக்கு ;)

said...

நன்றி நாணல்.

said...

எல்லாக் கவிதைகளுமே தேனாய் தித்திக்கின்றன...அருமை.. !

said...

wow nice ,"AAn vetkam alagilai
Yaar solliyathu"...excellent..
With regards,
kalkipriya.

said...

its superb........no chance

said...

aththanaiyum arumai........:)