
இரவுகள் பல கண்விழித்து உனக்காக வரைந்த ஓவியமொன்றை இரக்கமின்றி நீ கிழித்தெறிந்தது அறியாமல்
ஓவியத்தின் வண்ணங்களாக மிளிர்கிறது என் நேசம்.
பிடித்த பொம்மையை நெஞ்சிலணைத்துக்கொண்டு சந்தோஷமாய் ஓடுகின்ற குழந்தையை போல் உன்மீது நேசம்கொண்டு எத்தனை கனவுகளை நெஞ்சில் சுமந்து திரிந்தேன்....
அத்தனையும் கனவுகளாய் கரைந்தனவே!
நீ பரிசளித்த கடிகாரம்கூட பன்னிரெண்டில் ஒன்று சேர்வதில்லை என்பது இப்போதுதான் புலப்படுகிறது..
கண்ணீரின் கனம் தாளாமல் மரித்துவிட்டதோ நம் காதல்?
உயிரில் கலந்துவிட்டு நண்பன் நீ என்று வெகு இயல்பாய் சொல்லிப் பிரிகின்ற உனக்கு இதயமிருக்கிறதா?
ஒரு கறுப்பு நிற புடவையில் உன்னை பார்த்து, வீடு திரும்பிய நாளில் தோன்றியது வண்ண வண்ணக்கனவுகள்.
இந்தப்பிரிவில் வானவில்லும் கறுப்பு வெள்ளையாகிப்போனது. பற்றி எரிகிறது என்னுலகம். நீயோ மணமேடைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறாய்.
மணிக்கொரு முறை பேசாவிட்டாலும் கடிந்துகொண்டவள் இப்போது என் குரல் கேட்டபின்னரும் இயல்பில்லாத ஒரு புன்னகையை காற்றில் கரைத்துவிட்டு வெகு இயல்பாய் இணைப்பைத் துண்டிக்கிறாய்.
நீ உடைந்தபோதெல்லாம் ஒன்று சேர்த்தவன் இப்போது தவறவிட்ட கண்ணாடியாய் சிதறிக் கிடக்கின்றேன். நீயோ மணப்பெண் அலங்காரத்திற்கென கண்ணாடி முன் நிற்கிறாய்.
காதலென்னும் சிற்பம் செதுக்கினோம். உளியாய் நீ இருந்திருக்கிறாய். கல்லாய் நானிக்கிறேன்.
சிலரின் பிரிவில் ஞானம் பிறக்கும். சிலரின் பிரிவில் கானம் பிறக்கும்.
உன் பிரிவில் பிறந்திருக்கிறது வெட்கம். உன்னைப்போய் காதலித்தேனே என்கிற வெட்கம் இது.
உன்னோடு நானிருந்த நிமிடங்களை மறக்க முடியாமல் தவிக்கிறதென் இதயம். கண்ணோடு கலந்திட்ட காட்சிகளை அழிக்க முடியாமல் தவிக்கிறதென் இதயம். தவிப்புகள் நிறைந்த இதயத்தின் விசும்பல் உன் செவிட்டு இதயத்திற்கு எங்கே கேட்கப்போகிறது!
உன்னை வர்ணித்து ஆயிரம் கவிதைகள் எழுதிய விரல்கள் என்னிடம் கதறி அழுகின்றன. நேசமற்ற அவளுக்காக கவிதைகள் எழுதிய எங்களை வெட்டி எறிந்துவிடு என்று!
தீபமென்று நினைக்கவைத்தாய். தீப்பந்தமாய் எனை எரித்தாய். என்னில் பொழிந்த மழைதான் நீ. ஆனால் அமிலமழையடி!
32 comments:
Anna, Kalakkal Anna..
Kathalin Aazham vari thota kavithai...
Nalla Kavithai
Very good Kavithai... Intha valiyai nan anubavithukodu irukiren... But kalyana kolathil irupathu oru Aan . Small suggesstion... Kadalil emarauvathu eppavme Aangal kidayathu....pengalum than....
Very good Kavithai... Intha valiyai nan anubavithukodu irukiren... But kalyana kolathil irupathu oru Aan . Small suggesstion... Kadalil emarauvathu eppavme Aangal kidayathu....pengalum than....
அன்பு தோழரே,
நான் உங்களிடம் கேட்டது போல் ஒரு கவிதையை படைத்துஇருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. நான் அனுபவிக்கும் வேதனை அப்படியே கண்முன் உங்கள் கவிதையாய்.
என்றும் ரசனையுடன்,
சூர்யபாலா. ஆ.
வாழ்த்திய அன்பர்களுக்கு என் நன்றி.
"சிலரின் பிரிவில் ஞானம் பிறக்கும். சிலரின் பிரிவில் கானம் பிறக்கும்.
உன் பிரிவில் பிறந்திருக்கிறது வெட்கம். உன்னைப்போய் காதலித்தேனே என்கிற வெட்கம் இது."
Superb lines.... thanks a lot...
//நீ பரிசளித்த கடிகாரம்கூட பன்னிரெண்டில் ஒன்று சேர்வதில்லை என்பது இப்போதுதான் புலப்படுகிறது..//
இந்த ஒற்றை வரி போதும் காதலின் பிரிவை சொல்ல..
Hai Nilaraseegan, Excellent kavithai...
kavithai rombe nalla irukku brother.. i love it...
hi Nilaraseegan,
very nice one.. but i want to suggest one thing as Lakshmi said, aangal mattum yemaruvathu illai.. avargalukku pengalai yematravum theriyum enpathu ungalukku nanraga theriyum..
so Pls pengalai mattum thootra vendame..
//காதலென்னும் சிற்பம் செதுக்கினோம். உளியாய் நீ இருந்திருக்கிறாய். கல்லாய் நானிக்கிறேன்.//
ஐயகோ. என்ன ஒரு வரிகள்..
:(
//இரவுகள் பல கண்விழித்து உனக்காக வரைந்த ஓவியமொன்றை இரக்கமின்றி நீ கிழித்தெறிந்தது அறியாமல்
ஓவியத்தின் வண்ணங்களாக மிளிர்கிறது என் நேசம்..//
வார்த்தைகளே இல்லை என்னிடம்..
:(
Hi Nilaraseegan,
Arumaiyana kavithai sir.. Thaguthiyatra orvaridam konda kadhalin valiyai nalla solli irukeenga.
Hi Nilaraseegan,
Arumaiyana kavithai sir.. Thaguthiyatra orvaridam konda kadhalin valiyai nalla solli irukeenga.
Excellent emotional imagination.
You r not a doctor, not a counselor but your words brings a remedy for my stress.
Expecting some more good thoughts...
Antony
lakshmi,poornima,
காதலில் எப்பொழுதும் ஏமாறுவது ஆண்கள் மட்டும்தான் என்று நான் எங்கும் எழுதவில்லை. இந்தக் கவிதை ஒரு காதலனின் பார்வையில் எழுதப்பட்டது. அவ்வளவே. இது இருபாலருக்கும் பொருந்தும்.
புரிதலுக்கு நன்றி.
Very Good Kavithai. Its show's the truly pain of love.
(உன்னை வர்ணித்து ஆயிரம் கவிதைகள் எழுதிய விரல்கள் என்னிடம் கதறி அழுகின்றன. நேசமற்ற அவளுக்காக கவிதைகள் எழுதிய எங்களை வெட்டி எறிந்துவிடு என்று!)
வெறுப்பின் உச்சக் கட்டத்தை உணர்த்தும் வரிகள் ..
"சிலரின் பிரிவில் ஞானம் பிறக்கும். சிலரின் பிரிவில் கானம் பிறக்கும்.
உன் பிரிவில் பிறந்திருக்கிறது வெட்கம். உன்னைப்போய் காதலித்தேனே என்கிற வெட்கம் இது."
Ver very superb Lines. I dont have any words to paint about my feelings.........We are not getting these kind of treatments only in love....sometimes from the selfish friends are alos behaved like that.........We are getting the same kind of pain, when we came to know the real face of our selfish friends........Regards
Anoo....
Hi,
Varthaigalil Valiyin Athiruvugalai Unnaramudikirathu, Ennagalai Pola Kadalai Familyka Vitu koduthu vithu Iru puramum iruvarum veru oruvarudan manavalkaiku thayarakum valikalai eppadi Solluvathu?
Snehathudan VIJAI
//காதலென்னும் சிற்பம் செதுக்கினோம். உளியாய் நீ இருந்திருக்கிறாய். கல்லாய் நானிக்கிறேன்.//
உங்களை சிலையாய் செதுக்கிவிட்டுப்போன அந்த உளிக்கு நன்றி சொல்லுங்கள்!
சுடச்சுட ஒளிர்விடும் தங்கம்போல், பிரிவும் கவலையும், நிச்சயம் நிலைக்கும் நிம்மதியை கொடுக்கும்! அந்த நிம்மதிக்கு, எந்த காதலியும்/காதலனும் இணையாக மாட்டார்கள்....
Hi Tamizh,
Ur words are very very good. Ur words are making me to think in positive attitude. Thanks a lot.
//உங்களை சிலையாய் செதுக்கிவிட்டுப்போன அந்த உளிக்கு நன்றி சொல்லுங்கள்!//
ம்ம்..கண்டிப்பாக..
//சுடச்சுட ஒளிர்விடும் தங்கம்போல், பிரிவும் கவலையும், நிச்சயம் நிலைக்கும் நிம்மதியை கொடுக்கும்! அந்த நிம்மதிக்கு, எந்த காதலியும்/காதலனும் இணையாக மாட்டார்கள்....//
நிலைக்கும் நிம்மதி என்று சொல்ல முடியாது. நிம்மதி என்று மட்டுமே சொல்ல இயலும். ஏனெனில் எப்பொழுதெல்லாம் அந்த ஞாபகப்பூ மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் இதயப்பூ வாடிவிடுகிறது.
ithuthanda kavithai. nee thanda kavizan.
neeum thulaithu vittayo!
unn nilaavai.
kavalai padaathey.
indru powarnami.
naalai innoru nilaa varum. unakey unaakaga.
selva kumar.C.V
ithuthanda kavithai. nee thanda kavizan.
neeum thulaithu vittayo!
unn nilaavai.
kavalai padaathey.
indru powarnami.
naalai innoru nilaa varum. unakey unaakaga.
selva kumar.C.V
Hi,
Maansa romba bathikira kavithainga..
miga miga arputham....
ithuku mella solla ennidam vaarthai illai..
-Saran
dear...
it was one of the nice and powerful poetic way of expressing the love feeling..
i'm now feelimg about it only...
ungaludaya kavithaigal ennai engo kondu selginradhu...
keep your work up
Really damn superb.. I cant express.. how i felt, in words!!
Keep going..
kadaisi vaarththai.......
kothikkirathu!!!
simply superb...
vali arinthavarghalukku intha kavithai kaayam aatrum oru marunthaaga amaiyum...
yenakkum kooda...
nandri anna...
-kuMaR, Malaysia-
kalangal sendrum en kaathalai marakka ninaikkum ennai en aza vaikkirai nanbaa.
nandri ennai en pazaiya ninaivukku azaitthu sendramaikku
sudhakaran vj
Post a Comment