Friday, March 06, 2009

பிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதைகள்




1.யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு
கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில்
கதவைத் திறந்து
உள்நுழைகிறான் அந்நியனொருவன்.
விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.
தன்
அறை அது என்றெண்ணியபடி
உடை களைந்து
சதைப்பசியுடன்
அவளை நெருங்குகிறானவன்.

2. புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்னல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

3. சாத்தானின் கைகளில்
தேவதை
உன்னை சேர்க்கிறார்கள்.
சில வருட தனிமைத்தவம்
உடைத்து வெளிவருகிறேன்
நான்.
சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்.

நன்றி: யூத்புல்விகடன்.காம்

14 comments:

said...

இதயத்தில் கனக்கிறது ஒவ்வொரு பிரிவின் நிறங்களும்.. வரிகளும்...
கவிதை அருமை..


"நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்."

பரிதாபத்திற்குரிய வரிகள்..

said...

Really nice

yar ellam pirivai anubavithargalo
avarkaluku sugamana kavithai

Anonymous said...

உடை களைந்து
சதைப்பசியுடன்
அவளை நெருங்குகிறானவன்...

kodumaiyaana varikal..

said...

அருமையான கவிதைகள்
மூன்றுமே ரசித்தேன் அதிலும் இரண்டாவது கவிதை மிக அருபமை

ரசித்த வரிகள்
//யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.//

//உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.//

said...

விசும்பல் சப்தமும்
உருவம் தொலைந்த
நானும் காற்றில் கலந்து
மறைந்து போகிறோம்.

அருமை


புழுதிகளால் நிறைந்திருக்கிறது
நீ வசிக்கும் அறையின்
கண்ணாடி சன்னல்கள்.
தூர வானின் நீலம்,
வெளிச்சமற்ற அறையின்
இருள்,
இரக்கமற்ற வார்த்தையின்
சிவப்பு என
உன் கண்ணீர்
மூன்று நிறங்களின்
கலவையாய் வழிந்தோடுகிறது.
நீயோ சலனமின்றி
சன்னல் புழுதியில்
என் பெயரை
எழுதிக்கொண்டிருக்கிறாய்.

பிரிதலின் வலி
வரிகளில் வழிகிறது .

சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்.

கவிதை நல்லா இருக்கு .

said...

நண்பர் சங்கர் குமார் அவர்கள் இந்த மூன்று கவிதையின் நிறம் பற்றி எனக்கு மடலிட்டிருந்தார்.
அதை இங்கே இடுகிறேன்.

1.தன் காதலனைப் பிரிந்தவள், இன்னும் தணியாக் காதலுடன் அவன் மீது வைத்த மையல் மாறாமல் அழுகின்ற போது தன் காமப்பசிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் கணவனைக் கண்டு எழும் விசும்பல் ஒரு நிறம்.

2.சில காலம் கடந்த பின்னர், இயல்பு வாழ்க்கைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு, இனி விதி விட்ட வழியோ எனச் சலனமற்று இருக்கின்ற அடுத்த நிறம்.

3.மீண்டு வந்த காதலன், இய்ல்பு வாழ்க்கையில் முழுதுமாக ஈடுபடுத்திக்கொண்டு அதையே ஒரு சொர்க்கமாக மாற்றிக் களிக்கும் தேவதையின் நிறம் மூன்றாவது.

---------------------

பின்னூட்டமிட்ட அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

said...

excellent lines.. i wish to receive more poetry from u

Anonymous said...

கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வு பூர்வமாய் உள்ளது நண்பரே!

said...

நன்றாக உள்ளது

said...

//சாத்தானும் தேவதையும்
சொர்க்கத்தில் மிதப்பதை
காண்கிறேன்.
சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்//

அச்சச்சோ....அருமையான வரிகள்..
அன்புடன் அருணா

said...

பின்னூட்டமிட்ட அன்பர்களுக்கு என் நன்றிகள்

said...

//சாத்தானை ஆசிர்வதித்து
தேவதையை சபித்து
கடவுளாகிறேன்.//

மிக அருமை...வியந்தேன் சில வரிகளில்...

Anonymous said...

யாருமற்ற அறையில்
மடியில் முகம் புதைத்த
ஒருத்தியின்
விசும்பல் சப்தம் கேட்கிறது.
மெல்ல மெல்ல உருவம்
பெறுகிறேன் நான்.
விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு...


"விசும்பலின் கரங்களை
பற்றிக்கொண்டு"
சிறந்த கற்பனை வளம் பாரட்டியே தீறனும்.

said...

v v nice... superb..