Tuesday, March 24, 2009

எங்கே என் புன்னகை? - (கவிதையல்லாதவைகள்)




1.பனி விழும் இரவில் கைகள் நிறைய உதிர்ந்த இலைகளை அள்ளிக்கொண்டு எங்கேயோ நடக்கின்றன கால்கள்..
திசைகளை மறந்துவிட்டு எங்காவது பயணித்து பின் உணர்ந்து எனக்கான திசை தேர்வு செய்கையில் மலர்கின்றன
இலைகளெல்லாம் சிறு சிறு புன்னகையாய்.

2.கண்ணீரும் நிராகரித்த அந்தியொன்றில் கண்ணாடி யன்னல் வழியே நடைபாதையை வெறித்துக்கொண்டிருந்தன கண்கள்.
நாய்க்குட்டியுடன் கடந்துசென்ற சிறுமி தூரப்பார்வையில் அனுப்பினாள் சிறுபுன்னகையொன்றை. மெல்ல மெல்ல
மலர்ந்தது இதயம்.

3.மலர்கொத்து விற்கும் சீனப்பெண்ணின் புன்னகையில்தான் எப்போதும் மலர்ந்திருக்கிறதோ விற்பனைக்கு
காத்திருக்கும் பூக்கள்?

4. யாருமற்ற அறைக்குள் எழுகின்ற கேவல்சப்தங்களை நிறுத்திவிட முயன்று தோற்கிறது கவிதை.
கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.

10 comments:

Anonymous said...

நிலா ரசிகருக்கு வணக்கம்....

//யாருமற்ற அறைக்குள் எழுகின்ற கேவல்சப்தங்களை நிறுத்திவிட முயன்று தோற்கிறது கவிதைகள்.
கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.//

அழகான வரிகள்....
அற்புதம்.....
இவைகள் கவிதை அல்லாதவை அல்ல....
அழகான கவிதைகள் தான்....

நன்றி

said...

.//2.கண்ணீரும் நிராகரித்த அந்தியொன்றில் கண்ணாடி யன்னல் வழியே நடைபாதையை வெறித்துக்கொண்டிருந்தன கண்கள்.
நாய்க்குட்டியுடன் கடந்துசென்ற சிறுமி தூரப்பார்வையில் அனுப்பினாள் சிறுபுன்னகையொன்றை. மெல்ல மெல்ல
மலர்ந்தது இதயம்.
//

இக்கவிதை என்னை மிகவும் லயித்துக் கொண்டது
முதல் கவிதை மிகவும் அருமை
அடுத்தும் அழகனவை..
உங்கள் எழுத்துக்கள் 'உண்மையிலே மிக அழகாகவும் உயர்தரத்திலும் உள்ளது நம்பிக்கை தரக்கூடியதாகவும் உள்ளது'

இங்கு ஏன் உணமையிலே என்று சொன்னேன் என்றால் இந்த வளைப்பூ கலாச்சாரத்தில் எதை எழுதினாலும்
அதற்க்கு தக்க விமர்ச்சனமோ அல்லது
விவாதமோ இல்லை படித்தவுடன் வெறுமனவே இது அப்படி இருக்கு இது இப்படி இருக்கு என்று பிண்ணுட்டமிடும் வழக்கு உள்ளது அதனால்தான் அப்படிச் சொன்னேன்

Anonymous said...

ungal punnagai yen idhazhil :)

said...

கண்ணீரும் நிராகரித்த அந்தியொன்றில் கண்ணாடி யன்னல் வழியே நடைபாதையை வெறித்துக்கொண்டிருந்தன கண்கள்.
நாய்க்குட்டியுடன் கடந்துசென்ற சிறுமி தூரப்பார்வையில் அனுப்பினாள் சிறுபுன்னகையொன்றை. மெல்ல மெல்ல
மலர்ந்தது இதயம்.

மலர்கொத்து விற்கும் சீனப்பெண்ணின் புன்னகையில்தான் எப்போதும் மலர்ந்திருக்கிறதோ விற்பனைக்கு
காத்திருக்கும் பூக்கள்?

4. யாருமற்ற அறைக்குள் எழுகின்ற கேவல்சப்தங்களை நிறுத்திவிட முயன்று தோற்கிறது கவிதை.
கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.

அழகான வரிகள்
அருமையாக இருக்கிறது

said...

//கவிதைகள் உடனிருக்கையில் யாருமற்ற அறை என்றெண்ணிய மனதை நினைத்து மலர்கிறது புன்னகைகீற்றுகள்.//

100% உண்மை...ம்ம்ம் மனதை நிறாய்த்தது உண்மையாகவே....
அன்புடன் அருணா

said...

அன்பரின் ஆழ்மனம் புரிகிறது ! கவலை வேண்டாம் நண்பனே!

காதல் பழகிப்பார் , உன் இதயத்தின் வலி புரியும்.
சாடல் பழகிப்பார் , உன் வைராக்கியத்தின் வலிமை புரியும்.
அழுகை பழகிப்பார் , உன் புன்னகையின் பொற்கோவில் புரியும்
தனிமை பழகிப்பார் , இவ்வுலகம் எல்லாம் உனக்கு புரியும்.

உலகத்தை புரிந்து கொண்டு விரைவில் தாயகம் திரும்ப வாழ்த்துக்கள்!

அன்புடன்
அனுஷாதாசன்.

said...

யாருமற்ற அறைக்குள் நேற்று கூட எழுதும் போது எழுந்த கேவல் சப்தங்களை நிறுத்தி விட முயன்று தோற்றேன்..
இன்று என் முன் கவிதை வரிகளாய்...
வியக்கிறேன்....
நட்புடன், இறைவனின் அடிமை.

said...

யாருமற்ற அறைக்குள் நேற்று கூட எழுதும் போது எழுந்த கேவல் சப்தங்களை நிறுத்தி விட முயன்று தோற்றேன்..
இன்று என் முன் கவிதை வரிகளாய்...
வியக்கிறேன்....

நட்புடன், இறைவனின் அடிமை.

said...

Muthal kavithai arumainga.

Anonymous said...

NANUM EN KAVIDHAIGALAI ELUDHA VENDUM UDHAVI SEIYUNGAL....