Thursday, August 13, 2009

அமிலம் நிறைந்திருக்கும் ஓடை




1.
கண்ணாடியை உடைப்பதற்கு
முந்தைய கணம் எனலாம்
நீர் வற்றிய குளத்தில்
எறியப்பட்ட கல் எனலாம்
கவனிப்பாரற்று மிதிபடும்
ரோஜா இதழ்கள் எனலாம்
மலநாற்றமெடுக்கும்
படுக்கை கிழவி எனலாம்
முரண்களால் நிறைந்த
நம் ப்ரியங்களை
சாக்கடைநிலவு என்றும்
வர்ணிக்கலாம்.
எதுவாயினும் புணர்ச்சிக்கு
பின்பு சொல்.

2.
திசைக்கொன்றாய் சிதறிக்கிடக்கும்
தலையணைகளின் நடுவில்
அல்லது
வியர்வைவாசத்தின் நீட்சியில்
உனக்கொரு
கதை சொல்ல துவங்குகிறேன்
அரவமற்ற கடற்கரையில்
கருப்புக் குதிரை மீது
காற்றின் வேகத்தில் பயணிக்கும்
அரசகுமாரனை பற்றிய கதையது.
அவனது நீண்ட பயணம்
முடியும் முன்னர்
துவங்கிவிட்டது......

3.
கரம் பற்றி
கவிதை கேட்டு
கனவின் மீதேறி பயணிக்கிறது
முத்தங்களால் நிறைந்திருக்கும்
நம் அறை.
களைத்து வீழ்ந்த பின்பொழுதிலும்
தலைகோதியபடியே இருக்கின்றன
நம் ப்ரியங்கள்.
காதோர கெட்ட வார்த்தைகளிலும்
சன்னல் கம்பிகளில் ஊர்ந்துசெல்லும்
எறும்பு வரிசையிலும்
நிலைக்கிறது
நம் மனம்.
வா மீண்டுமொரு முறை
குளிக்கலாம் என்கிறாய்
நீ.

12 comments:

said...

//முரண்களால் நிறைந்த
நம் ப்ரியங்கள்//

//அவனது நீண்ட பயணம்
முடியும் முன்னர்
துவங்கிவிட்டது//

//களைத்து வீழ்ந்த பின்பொழுதிலும்
தலைகோதியபடியே இருக்கின்றன
நம் ப்ரியங்கள்.//

அற்புதமான உவமைகள்/வரிகள்.
நல்ல கவிதைகள் நிலா..

நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தோழங்களை சுமந்துகொண்டு ஒரு கவிதை தொகுப்பு :-)

said...

மூன்றுமே பிடித்திருக்கின்றது !

said...

"அமிலம் நிறைந்திருக்கும் ஓடை"

Excellent Kavithai!

Oru nimidam Nijangalai Maranthuvitu...
Ninaivugalil Muzhugiviten..

Thanks Nilaraseegan!

said...

//முரண்களால் நிறைந்த
நம் ப்ரியங்களை
சாக்கடைநிலவு என்றும்
வர்ணிக்கலாம்.//

intha uvamai pidiththathu........

yethai sollureengannu puriyuthu.
yaarai sollureengannuthaan puriyala..

nalla muyarchi..
vazhththukkal nila!!

said...

நன்றி
செளமியா,ஆ.மு,கற்குழலி,இரசிகை.

//yethai sollureengannu puriyuthu.
yaarai sollureengannuthaan puriyala..//

"யாரையும்" சொல்லவில்லை.
"எதை" மட்டும்தான் சொன்னேன் இரசிகை. நன்றி.

said...

நிலாரசிகன்.

கவிதைகள் நன்று. வெறுப்பை பதிந்திருப்பது போலும் இருக்கின்றது. பிரியத்தை எழுதி இருப்பது போலும் இருக்கின்றது.

said...

புணர்ச்சிக்கு முன்/பின் பற்றி மட்டுமே எழுதி இருக்கிறேன் உயிரோடை.

said...

:) very romantic.
-vidhya

said...

Thank you Vidhya :)

said...

முரண்களாலான நம் வாழ்க்கையில் முரண்களான நம் உணர்வுகள் இயல்பே :-).

said...

கவிதைகள் nalla iruku,... (Ana enaku than onnum puriyalai) pls publish pannadheenga;;;-( . Apparam thituveenga

said...

முரன்படுதலைகுட மிருதுவாய் சொல்லும் நிலவின் ரசீகனுக்கு வாழ்த்துக்கள்