Saturday, May 01, 2010

துறவுக் கவிதைகள்


1.
நிரந்தரமற்ற வாழ்வை
இவ்விரவு பாடலாக பாடிக்கொண்டிருக்கிறது.
காற்றில் அசைகின்ற இலைகள்
உதிர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.
வெப்பத்தின் குரல் அங்குமிங்கும்
அலைந்தபடி இருளை விழுங்க
முயல்கையில் விழுகின்ற மழை,
மழை போலவே இல்லை.
கனவுகளை தின்று செரித்த
பூமி தீராப்பசியுடன் சுற்றுகிறது.
துறவுநிலையின் உச்சத்தில் நுழைகின்ற
குழந்தையொன்றின் அழுகுரலில்
உருவாகிறது நாளைய காவியத்தின்
முதல் வரி.


2.
இப்படித்தான் நிகழுமென்ற
கணிப்புகள் எப்போதும்
தவறானதாகவே முடிந்துவிடுகிறது.
காலம் கடந்தே வாசல்வந்து
நிற்கிறது ஞானம்.
காலத்தின் சித்தரிப்புகளில்
சுயமோகியாக அல்லது உக்கிரமிக்கவனாக
காட்சியளிக்கிறேன்.
எருதொன்றை புசிக்கும் விலங்கின்
பற்களின் கூர்மையை கொண்டிருக்கிறது
வார்த்தைகள்.
உன்னதமான அன்பை பற்றிய
போதனைகளை அபத்தமென்று
உள்மனம் எடுத்துரைக்கிறது.
எப்பொழுதும் தனிமைக்குள்
புதைந்துபோதலை விரும்புவதாக
மார்தட்டுகிறது மனம்.
முரண்பாடுகளால் நிறைந்திருப்பினும்
ரசிக்கவே செய்கிறேன்
உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
குறும்புன்னகையை.

-நிலாரசிகன்.

14 comments:

said...

ரசித்தேன். இரண்டாவது மிகவும் அருமை. :)

said...

2 vathu remba pidichchurukku......

[m..karuvelanizhal-ku neega koduththa response-i rajaram sir post seithirunthaanga.naan vaasichchen.]

said...

நன்றி ஷங்கர் :)

said...

இரசிகை,

//[m..karuvelanizhal-ku neega koduththa response-i rajaram sir post seithirunthaanga.naan vaasichchen.]//

சுட்டி தர இயலுமா? அவரது தளத்தில் தேடினேன் கிடைக்கவில்லை.

said...

http://karuvelanizhal.blogspot.com/2010/04/blog-post_28.html

said...

thodangi mudivana - kavithai kalukkaana comments la poi paaththeenganna kidaikkum nila:)

said...

:) நன்றாக இருந்தது... முதல் கவிதையை மிகவும் இரசித்தேன்...

//
துறவுநிலையின் உச்சத்தில் நுழைகின்ற
குழந்தையொன்றின் அழுகுரலில்
உருவாகிறது நாளைய காவியத்தின்
முதல் வரி.

துறவுநிலையின் உச்சத்தில் நுழைகின்ற
குழந்தையொன்றின் அழுகுரலில்
உருவாகிறது நாளைய காவியத்தின்
முதல் வரி.
//

இரசித்தவை... :)

நன்றி நிலா... இரு அருமையான கவிதைகளுக்கு...

said...

துறவுக் கவிதைகள் :

நன்றி இரசிகை,ஷங்கர்,நாளைப்போவான்.

said...

உன்னதமான அன்பை பற்றிய
போதனைகளை அபத்தமென்று
உள்மனம் எடுத்துரைக்கிறது.
எப்பொழுதும் தனிமைக்குள்
புதைந்துபோதலை விரும்புவதாக
மார்தட்டுகிறது மனம்.
முரண்பாடுகளால் நிறைந்திருப்பினும்
ரசிக்கவே செய்கிறேன்
உறக்கத்தில் சிரிக்கும் குழந்தையின்
குறும்புன்னகையை.//

arumai!

said...

//உன்னதமான அன்பை பற்றிய
போதனைகளை அபத்தமென்று
உள்மனம் எடுத்துரைக்கிறது.//

உங்கள் கவிதையை நன்றாயிருக்கிறது என்று சொல்வது அபத்தமாகவும் தோன்றலாம்.
உள்ளம் உண்மையில் துடித்து, அதை வெளிப்படுத்தும்போது.....விமர்சனம் செய்கிற தகுதி மொழிக்கு இல்லாமல் போகிறது.
ரசித்தேன், உங்களது உள்ளத்தின் வெளிப்பாட்டை.

said...

நிலா, பிறையிலும் அழகு... பௌர்ணமியிலும் அழகு...
அதுபோல் உங்கள் இடுகைகள் அனைத்தும் எப்பவும் அழகு.
இந்த இரண்டும் அழகிற்கு அழகு சேர்க்கும் கவிதைகள்.
அருமை.

said...

க‌விதைக‌ள் நன்று வாழ்த்துக‌ள்

said...

(இப்படித்தான் நிகழுமென்ற
கணிப்புகள் எப்போதும்
தவறானதாகவே முடிந்துவிடுகிறது.
காலம் கடந்தே வாசல்வந்து
நிற்கிறது ஞானம்.)

:)

said...

அழகான வார்த்தை கோர்வை