Tuesday, September 14, 2010

மொழிபெயர்ப்புக்கவிதைகள்




1.

அப்போது அவளது வயது
பதினேழு முடிய நான்கு மாதமிருந்தது.
செந்நிற உடலின் வனப்பை
அவள் கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள்.
துலிப் பூக்களால் நிரம்பிய
தோட்டத்தில் அவனை சந்தித்தாள்.
அவன்,
அவளது உடலை ஊடுருவும் பார்வையை
கொண்டிருந்தான்.
தேம்ஸ் நதிக்கரையில் அவனது
விரல் பற்றி நீண்ட தூரம் நடப்பதை போன்றொரு
கனவில் ஆழ்ந்தாள்.
இனி
அவள் உடலெங்கும் துலிப்
பூக்கள் மலரும்.
அவள் மலர்வாள்.

2.
ஜன்னல் வழியே
உள்நுழைந்தவன்
தன்னை சாத்தானின் பிள்ளை
என்றபோது இரவு கவியத்துவங்கியிருந்தது.
படுக்கை அறையின்
ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தேன்.
என் கடவுளின் வெளியில்
கனவுகள் மரித்தன.
தொலைபேசியின் அலறலும்
பூனையின் கதறலும்
எவ்வித மாற்றத்தையும் கொண்டுவரவில்லை.
கால்களில் நடுவிலிருந்து
அறையெங்கும் பரவிய
குருதியின் நிறம் கருமை நிறத்திலிருந்தது.
இப்போது அவன்,
மெல்ல வெளியேறிக்கொண்டிருக்கிறான்.

3.
இந்த வலியை யாரிடம்
பகிர்ந்துகொள்வது?
தினம் மாலை தன் பேரனுடன்
வீட்டைக்கடக்கும் கிழவன்
என் வலியை புரிந்துகொள்ளப்போவதில்லை.
சாலையோரம் நிற்கும்
இந்த மரங்களிடமும்
தொலைவில் பொழியும்
மழையிடமும் நான்
இந்த வலியை பகிர்ந்துகொள்ளக்கூடும்.
பின்னொருநாள்
காலம் தின்ற பின்
மழையாக பொழிந்து
மரமாக என் வலிகள் அனைத்தும்
மீண்டும் துளிர்விடக்கூடும்.
ஜூலி!
அப்பொழுதாவது அந்த மரங்களின்
நிழலில் நின்று நீருற்ற
நீ சம்மதிக்கவேண்டும்!

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: இந்த மூன்று கவிதைகளின் தலைப்பில் சிறு மாற்றம்... "மொழி பெயர்ப்புக் கவிதைகள்  வடிவிலான கவிதைகள்" என்பதே அது :)

8 comments:

said...

தொலைபேசியின் அலறலும்
பூனையின் கதறலும் //
சரியாக திடுக்கிடும் உணர்வைக் கொண்டு வந்த வரிகள் .
மொழி பெயர்ப்பா? மொழி பெயர்ப்பு மாதிரியா?

said...

nilavuku olikutum nilarasigarey,
Ungall kavithaigal anaithum arumai...

---
Chandra

said...

nalla irukku munrum..!

said...

கவிதைகள் அருமை நிலா

said...

மூன்று கவிதைகளுமே மிகவும் நன்றாக இருந்தன. அடிக்கடி எழுதுங்கள்!

said...

nandri nanbargalae..

said...

saththiyamaa puriyala nila..!!
irunthaalum vaazhthukal....:)

said...

நல்லாயிருக்கு.