Thursday, November 10, 2005

நான் பெத்த மகளே...

நீ பொறந்தநாலு மாசத்துல
காது குத்த போகையில
கண்ணு கலங்கி கோயில்
தூணுக்கு பின்னாலகாணாம
போனவுக....

சிலேட்டு குச்சிதிங்குற
வயசுல வேகாதவெயிலுல
அஞ்சுமையிலு அலைஞ்சி
அய்யனாரு கடையில
நோட்டுப் புத்தகம்
வாங்கியார போனவுக...

அம்மன் கோவில் திருவிழாவுல
பலூனுவாங்க போன புள்ள
அரைமணி கழிச்சுவந்த நாளுல
என்னாச்சோ ஏதாச்சோன்னு
சிங்கத்துக்கு பயப்படாத
எம் மகராசா சின்னபுள்ள
உனக்காக பயந்து போனவுக....

ரெட்ட ஜடை போடுறவயசுல
பொட்ட புள்ளஉனக்குபட்டுத்
தாவணிவாங்கியார நடந்தே
பட்டணம்போனவுக...

வாசல்லகோலம் போடபோன
புள்ளமனசுல கோலம்போட்டு
போனானே ஒரு வெளங்காத பய..

சடங்கான சேதியஆத்தாக்கிட்ட
சொல்லாம அப்பங்கிட்ட
சொன்னபாசங்கெட்ட புள்ள,
காதலிச்ச கருமத்தயாருகிட்டயும்
சொல்லாமபோனியே!

வேற சாதி பையனாஇருந்தாலும்
பெத்தபுள்ள உம்பட்டு
மனசுபட்டுருக்கூடாதுன்னு
எம் மகராசாசம்மதிச்சிருப்பாகளே….
அவசரப்பட்டு போயிட்டியே..
உன்னப் பார்க்கஅவசரப்பட்டு
எட்டரை மாசத்துல
நா பெத்தமரிக்கொழுந்தே!

ஊரெல்லாம் ஒண்ணுக்கூடிசிரிக்க,
ஓடிப்போன உன்னால உத்திரத்துல
தொங்கிஎம் பொட்டு அழிச்சிபோனவுக...

நாப்பது வருசம்நாயா
அலைஞ்சுஎறும்பா சேர்த்துவச்ச
நாப்பது காணிநிலத்தசாகப்போற
நேரத்துலபொறக்க போறஉம் புள்ளைக்கு
எழுதிவைச்சுபுட்டு போனவுக...

அப்பஞ் சாவுக்குவராத
வெக்கம் கெட்டபுள்ள..
ஆத்தா நா நிம்மதியாபாடையில
போக...
பத்திரம் தொலையும்முன்னே
பத்திரமா வந்திடடி…

4 comments:

Anonymous said...

“Sadangaana sethiya aatha kitta sollama appan kitta sonna paasanketta pulla” intha varigal, appavin methu magal vaithu irukkum paasathai, veguli thanathai katti iruku. Kavithaiein kadaisi varigalil, “petha manasu pithu, pulla manasu kallu” eanbathai alagaga unarthi iruppathu arumai…


Kavithaigaludan,
Nila.

said...

simply fantastic

said...

நெஞ்சை உருக்கும் வரிகள். பாராட்டுக்கள். தமிழ் மணம் விருது பெற என் வாழ்த்துக்கள்!

said...

ரொம்ப நல்லா இருக்குங்க. எனது கவிதையை விடவும் அதீத வலி உங்கள் வரிகளில் தெரிகிறது.