
எனக்கு மின்னஞ்சலில் வந்த ஒரு புகைப்படம்
மனதை ஏதோ செய்தது...
அதில் என் எண்ணங்களை பதிவு செய்தேன்.
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
1 comments:
படம் பார்த்து கதை சொல் அப்டீன்னுவாங்க ஆனா நீங்க கவிதை சொல்லுறீங்களா? அருமையான கவிதை!
Post a Comment