1.நீ பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.
கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.
உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.
2. என்னை விட்டுப்
போகின்ற கடைசி
நாளில் நீ அழாமல்
போகவேண்டும் என்று
துடிக்கிறது மனசு.
என் பிரிவெண்ணி
அழாமல் போய்விடுவாயோ
என்றும் தவிக்கிறது அதே
மனசு.
முரண்பட்ட நினைவுகளில்
சிக்கித் தவிக்கிறது
உன் மீதான் என்
உயிர்ப்புள்ள காதல்.
3. எத்தனை முறை
காதலை கொடுத்த
இறைவனுக்கு
நன்றி சொல்லியிருப்போம்.
நம்மைப் பிரித்து
நன்றிக்கடன் செலுத்தும்
இறைவனுக்கு காதலின்
வலி தெரியுமா?
4. நீ எனக்காக அழ
நான் உனக்காக அழ
நமக்காக பாவம்
நாளெல்லாம் காதல்
அழுகிறது கண்மணி!
நாம் வாழ பிறந்தவர்களா
இல்லை அழ பிறந்தவர்களா?
Wednesday, September 27, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
மிகவும் அழகாய் எழுதுகிரீர்கள்...!!
//
உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து
//
வாழ்த்துக்கள்!!
சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்!
கவிதைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
நம் இருவரின் படைப்புகள் தமிழ்மணத்தில் அடுத்தடுத்து வந்திருக்கின்றன. பார்த்தியா நண்பா.. யதேச்சையாக அனுப்பினாலும் நாம் அருகில்தான் இருக்கின்றோம்
என்னுடைய பிரிவுக் கவிதை எனக்குள் சோகத்தை உற்பத்தி செய்கின்றது...
வார்த்தைகளில் வலி நன்றாக தெரிகிறது! வாழ்த்துக்கள்
காதல் வலியது தான் ...காதல் வலி அதனால்தான்...?!
nice
Post a Comment