
1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...
2. புள்ளியாக நீ
மறையும் வரையில்
நின்றழுதேன்.
புள்ளியில்லாக் கோலமாக
மாறிப்போனது
நம் நட்பு.
3.நண்பர்கள் பிரியும்
பொழுதெல்லாம் அழுகிறான்
இறைவன்,
மழையுருவில்.
4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.
5.தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.
9 comments:
//திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.//
உண்மைதான்
//பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...//
பிரிவை இதை விட உணர்வோடு எப்படிச் சொல்ல முடியும்?
அழகான உணர்வின் பதிவு.
அன்புடன் அருணா
நன்றி கார்த்திக் மற்றும் அருணா.
நல்ல கவிதைகள் நிலா!!!!!!
//தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது.//
உண்மையான வரிகள்..
வலிகளும் கூட
//1.பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்...//
அருமை!
//4.காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.//
உண்மை, இது நட்பில் மட்டுமே
சாத்தியம்...
பிரிவை இதை விட உணர்வோடு எப்படிச் சொல்ல முடியும்?
Attakasamana onru..
பிரிந்தென்னை
சிலுவையில்
அறைந்துபோனாய்
உயிர்த்தெழுகின்றன உன்
ஞாபகங்கள்... super lines................
Life is nothing without friends......
காரணமின்றி பிரிதலும்
பின்னுணர்ந்து தோள்சேர்தலும்
நட்பில் மட்டுமே
சாத்தியம்.
நிஜத்தை வார்த்தையில் காண்கிறேன்.
புன்னகை பூவே :-)
//தினம் திட்டும் அப்பாவின்
வார்த்தைகளைவிட
திட்டாமல நகரும்
நண்பனின் மெளனம்
கொடியது//
சூப்பர்!!
Post a Comment