Monday, March 31, 2008

சொற்கள் தீர்ந்த பொழுதில்...




பின்னிரவின் நீளம்
குறைத்திட முயன்று
தோற்றுக்கொண்டிருந்தேன்..

இருள் சூழ்ந்த
மரத்தடியில் உருவமற்ற
அரவமொன்றின்
நெளிதல் சத்தம் கதவிடுக்கின்
வழியே கசிந்துகொண்டிருந்தது...

ஒரே இரவில்
வறண்டு பாலையென
காட்சியளித்தது
என் கடல்..

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.

4 comments:

said...

வேதனையின் உச்சம், இயலாமை, வாழ்க்கையின் மீது வெறுப்பு, கழிவிறக்கம் என எல்லாம் கலந்த ஒரு நிலையோ!

said...

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு
உலகில் என் இறுதிச்சுவடுகள்
பதிந்திருக்கக்கூடும்.

அர்த்தமுள்ள ஆழகான வரிகள்....

said...

நன்றி மஞ்சூர் & மதுசூதனன்.

said...

சொற்கள் தீர்ந்த ஏதோவொரு உலகில்..