Friday, July 25, 2008

ஒரு புல்லாங்குழல் ஊமையானது.....

"தவிர்த்தலுக்கென்றே ஒரு

பார்வை வைத்திருக்கிறாய்

நீ.

தவிப்பதற்கென்றே ஒரு

இதயம் வைத்திருக்கிறேன்

நான்"

அன்புத் தோழி....

சில நாட்களாய் ...என் இதயத்தின் கரைகளை அரித்துக் கொண்டிருக்கிறது சில பதில்தெரியாத கேள்வி அலைகள்.

விடைக்கு சொந்தக்காரி நீ என்பதால் உனக்கு இந்த மடல். சில நாட்களாக உன்னிடமிருந்து எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அழைத்தபோதும் எந்த பதிலும் இல்லை உன்னிடமிருந்து.

ஒவ்வொரு முறையும் செல்பேசி ஒலிக்கும் போதும் அதில் உன் பெயரைத் தேடி தேடி களைத்து போய் விட்டது விழிகள் இரண்டும். இனியும் நீ என்னை அழைப்பாய் என்கிற நம்பிக்கையும் நசிந்து போனது. எனக்கென்னவோ நீ என்னை தவிர்ப்பதாய் படுகிறது. ஆனால் காரணம் மட்டும் இப்போதும் புரியவில்லை. தவறாக எதுவும் நான் பேசிவிடவில்லையே. பின் ஏன் இப்படி?? தவறாக பேசினாலும் தவிர்ப்பது நட்பிற்கு அழகில்லையே. பல சமயங்களில், நண்பர்களுக்குள் கருத்துவேறுபாடு வரலாம் தோழி... ஆனால் நட்பில் வேறுபாடு வரலாமா? எண்ணங்கள் மாறுபடும்...உணர்வுகள் மாறுபடும்...ரசனைகள் மாறுபடும்...
என்றும் மாறாமல் இருப்பது அன்பும் நட்பும் மட்டும்தானே. உன் மெளனம் என்னைக் காயப்படுத்துகிறது தோழி. அதே சமயம் நிறைய யோசிக்கவும் வைக்கிறது. உன்னிடம் என் வலி,சோகம்,சந்தோசம்,நட்பு,என் முறிந்த காதல் எல்லாம் பகிர்ந்து கொண்டேனே...
எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை???


உலகில் கொடுமையான விசயங்களில் முதல் மூன்று என்ன தெரியுமா?
1. நட்புக்குள் பொய்.
2.காதலுக்குள் பிரிவு.
3.எதற்காக தவிர்க்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தவிப்பது.


இப்போது இந்த மூன்றாவது துன்பத்தை அனுபவிக்கிறேன் உன்னால். அதுவும் மூன்றாவது முறை. முதல் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு நம் புரிதலில். இரண்டாம் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு உன் புரிதலில். மூன்றாம் முறையும் என்னை நீ தவிர்க்கிறாய் தவறு நம் நட்பில்.... இதை சரியாக்க வழி நம் பிரிதலில்... அப்படி எதுவும் நடக்ககூடாது என்று வேண்டுதலில் கழிகிறது என் நிம்மதியில்லா நிமிடங்கள்...

நான் உடைந்து போகும் போதெல்லாம் உன் நட்பான வார்த்தைகள்தான் என்னை ஒன்று
சேர்க்கும். தவறவிட்ட கண்ணாடியாய் இப்போது உடைந்து கிடக்கிறேன் நீயோ அதில் உன் முகம் கூட பார்க்காமல் திரும்பி நிற்கிறாய். என்னையே என்னால் நம்பமுடியவில்லையே.... உனக்குள் இப்படியும் ஒரு முகமா?? உன் கோபத்தைக்கூட ரசித்திருக்கிறேன் உனக்கே தெரியாமல் பல முறை. ஆனால் தெரிந்தே வெறுக்கிறேன் உனது தவிர்ப்பை. என் ஒவ்வொரு கவிதைக்கும் நீயே முதல் வாசகி. இனி யாரிடம் சென்று என் கவிதைகளைக் காண்பிப்பது? அப்படி காண்பித்தாலும்தான் என்னவாகிவிடப்போகிறது???


கவிதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அவர்களது வாசிப்பின் வலி தாங்காமலேயே
வாடிப்போகுமே என் கவிதையும். என் காதலியை விடவும் உயர்ந்தவள் நீதான் என்றேன் ஒரு நாள். அதெப்படி என்றாய் அழகாய் புருவங்கள் உயர்த்தி. என் காதலி காதலை மட்டும்தான் கற்றுத்தந்தாள். அது அவளது சுயநலத்திற்காக.... நானும் கற்றுக் கொண்டேன் அது என்
சுயநலத்திற்காக... அதுதவறில்லை... ஒவ்வொரு காதலுக்குள்ளும் சுயநலம் உண்டு. அது காதலின் சிறப்பு.

ஆனால் நீ எனக்கு நட்பின் முழு அர்த்தத்தையும் புரிய வைத்தவள்.... எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி... சுயநலமின்றி.... சொல்லப்போனால் நீ என் நட்பைக்கூட எதிர்பார்க்காமல்... என் மீது
நட்பு மழையை பொழிந்தவள். மழையை எப்படி சுயநலம் என்பது அது பொதுநலமல்லவா என்றேன். சாரல்களாய் சிரித்தாய் நட்புத்துளிகள் என்னை நனைத்தன அன்று. புரிந்து கொள்ளாமல் சிலர் புண்படுத்தும்போது மருந்தாய் இருந்தது உன் மயிலிறகு வார்த்தைகள் மட்டும்தான். இப்போது உன் மெளனம்தான் என் நட்பென்னும் பூவை கிள்ளி எறியப்பார்க்கிறது.


ஏதாவது பேசினால் தவறாகிவிடுமோ என்கிற பயம் இல்லாமல் நான் பேசுவது தோழி உன்னிடம்தான். உன் அம்மாவிடம் நீ என்னை அறிமுகப்படுத்தியது உனக்கு
நினைவிருக்கிறதா தோழி? வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவனை அதட்டி
கூட்டிச் சென்றாய் உன் வீட்டிற்கு...

"அம்மா பாரும்மா என் பிரண்ட் வந்திருக்கான்" என்றதும் சமயலறையில் இருந்து வெளிப்பட்ட உன் அம்மா..
வாப்பா எப்படிப்பா இருக்க....வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே...
இந்த அம்மாவை பார்க்க இஷ்டமில்லையாப்பா என்றார்கள். சட்டென்று விழியோரம் ஈரமாகிப்போனது எனக்கு. ஆண்-பெண் நட்பென்றாலே சந்தேகப் பார்வை பார்க்கும் சமுதாயத்தில் உன் அம்மா எனக்கு தெய்வமாய் தெரிந்தார்கள்.. அடுத்த நாள் நீ வந்ததும் என்னிடம் கேட்டாய். "ஏன்டா நேத்து எங்க வீட்ல உன் கண்ணுல கண்ணீர் வந்துச்சு?"
"அடிப்பாவி பாத்துட்டியா. அது வந்து... ஆனந்த கண்ணீர் என்றேன் நான்... சந்தோஷத்தில் கூட உன் கண்கள் அழக்கூடாது என்றாய். இப்போது கவலையில்கூட என் கண்கள் அழாமல்தான் இருக்கிறது. ஆனால் என் இதயம்தான் அழுது அழுது இதயம்சிவக்கிறது. என்னை விட அதிகம் உன்னிடம் நட்பாய் இருந்தது என் இதயம்தானே…


பூங்காவில் நாம் அமர்ந்திருக்கும் அந்த வேலியோர மூங்கில் மரம் உனக்கு நினைவிருக்கிறதா?
"நான் அதிகம் விரும்புவது இசைதரும் புல்லாங்குழலின் தாய் இந்த மூங்கில்
மரத்தைதான்" என்று அடிக்கடி சொல்வாய். இனி அதுவும் உன்னைப் போல் ஊமை புல்லாங்குழலைத்தான் தருமோ? வாழ்க்கை எவ்வளவு விசித்திரமாய் இருக்கிறது!
பிரிவின் வலியை உணர்த்துபவள் காதலி என்பது தெரியும். தவிர்ப்பின் வலியை உணர்த்துபவள் தோழியோ? எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினாய். மொழியுடன் நட்பானேன். எனக்கு கவிதைகளை அறிமுகப்படுத்தினாய். விருட்சமாக வளர ஆரம்பித்தேன்.
எனக்கு தூயநட்பினை அறிமுகப்படுத்தினாய். நண்பனாக தோள் தந்தேன். இப்போது தவிர்ப்பை அறிமுகப்படுத்துகிறாயே... நான் என்னவாக போகிறேன்? என்னதான் என்னிடம் நீ பேச மறுத்தாலும்... ஒருவகையில் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது தோழி....
எனக்கு வைராக்கியத்தின் வைர வலிமையையும் அறிமுகப்படுத்திவிட்டாயே!


இனியும் நீ என்னிடம் பேசுவாய் என்கிற கடைசிச்சொட்டு நம்பிக்கையும் ஏழை வீட்டு சோற்றுப்பானையாய் காலியாகிப் போனது. ரிக்சா மிதிப்பவனின் இறுகிய கால்தசைகளாய் இறுகிப்போனது என் மெல்லிய இதயம். என்றாவது எங்காவது உன்னை நான் சந்திக்க நேர்ந்தால். ஊமையான என் புல்லாங்குழலிலும் இசை பிறக்கும்... அதுவும் எனக்குள் இருக்கும் உன்னைப் பற்றித்தான் பாடும். அந்த நட்பின் பாடலிலாவது உன் கல்நெஞ்சும் கரையுமா?

நீ முறித்த சிறகுகளுடன்....
நீ தவிர்த்தாலும் உன்
நட்பைத் தேடும்
உன் தோழன்,


-நிலாரசிகன்

23 comments:

said...

தவிப்பின் வலியை உன்னததமாக கூறி உள்ளீர்கள்...

Anonymous said...

Oru arumaiyana nattpu kavithai
No words to express my feelings.
Touching words and expressed the truth in a marvellous way :-)

Anonymous said...

Dear Friend, how can express myshelf? its really nice. The fellings came to the words. The words are beautiful, and glitering when the truth coming.

i pray to god; ur friend will call u soon......

NATPUDAN SUDARMANI

said...

வலி கொடூரமானது, இந்த வலி இன்னும் கொடூரமானது.

said...

ஹாய் நிலா ரசிகன்,

அழகான ஆழ்ந்த அர்த்தம் கொண்ட கதைக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள், ஆனால் ஒரு வருத்தம் "அந்த நண்பனுடைய மடலுக்கு அவனது தோழி பதில் எதுவும் அனுப்பவில்லையா???"

கணேஷ் சண்முகலிங்கம்

said...

நட்போட பிரிவின் வலியை அழகா சொல்லி இருக்கீங்க..
நிச்சயம் உண்மையான நட்பு தோற்காது...
உங்கள் தோழனின் நட்பு அவரை நாடி வர என் வாழ்த்துக்கள்...

said...

anbu nanba

natpu vellattum

said...

your's friend will call you soon. after seeing this kavithai..

Anonymous said...

Don know how to express my feelings.. its really very touching.You expressed the friendship and the pain in this kavithai. Hope your friend will talk to u soon.

Anonymous said...

The way u hav expressed is amazing.

said...

காலம் நல்ல மருந்து..!
நல்லது மட்டுமே நடக்கும்..!

இழைமாறாத நட்புடன் காத்திருந்தால்...!


//உலகில் கொடுமையான விசயங்களில் முதல் மூன்று என்ன தெரியுமா?
1. நட்புக்குள் பொய்.
2.காதலுக்குள் பிரிவு.
3.எதற்காக தவிர்க்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தவிப்பது.//

அற்புதம்..!

Anonymous said...

Hi,

The poem is too gud.Everything is for good only..Hope your friend will call you soon.

Anonymous said...

Hi
It was very nice yaar.. the same thing is happened in my life yaar...
i am not able to control myself while reading this...
I am excepting More like this...

Regards,
BalachandranLoganathan

said...

Hmmmmmmmmmmm............... Hard to express my feelings :-)

Anonymous said...

arumaiyana kavithai nilarasigan......

said...

Hai friend this page is so good. Ya... Its really painfull to miss a best friend.
Your lines touched us a lot......

said...

அன்புள்ள நிலாரசிகன் அவர்களுக்கு,

வணக்கம். உங்கள் கவிதை ஆழ்ந்த ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. நட்பின் வலியை எங்களுக்கும் கொடுத்து விட்டீர்கள். இது கற்பனையா? உண்மையா? என்று எனக்குத் தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கவிதை அருமை. உங்கள் எழுத்துக்கள் மிகவும் வசீகரமாக உள்ளது. நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல கவிதை ரசிகனாக இருப்பவர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு நல்ல ரசிகனால்தான் ஒரு நல்ல படைப்பை ஆத்மார்த்தமாகத் தர முடியும். உங்கள் பெயரே உங்களை நல்ல ரசிகனென்று அடையாளம் காட்டுகிறதே! இதைவிட வேறென்ன சான்று தேவை? உங்கள் கவிதை மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. உங்கள் தமிழ் இன்னும் எண்ணற்ற படைப்புகளை தமிழார்வலர்களுக்குத் தரக் கடமைப்பட்டுள்ளது. உங்கள் தமிழ் ஆர்வம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

- பிரியா.

said...

Hi Nilaraseegan,

It is really cute.You expressed your feelings well.I dont want this to be true.But I like u r imagination......

said...

தவிர்த்தலுக்கென்றே ஒரு
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்"
alagana arambam..thavipu..tavirpu..
unmaikal pala puthaithu ulana ungal thavipukul..

said...

UR POET IS MY REAL LIFE. THANK U.

said...

UR POET IS MY REAL LIFE. THANK U.

Anonymous said...

Hi Nila Raseegan,

This was my second time reading this poem.. still i want to read again and again..

Nice Poem....

Regards,
Praharika

said...

:)