Saturday, September 19, 2009

இரண்டாம் தவறில் ஜனித்தவன்





கனவுகளில்
இறப்பை கொண்டாடுகிறான்
அவன்.
சிதை அல்லது கல்லறை
ஏதோவொன்றில் அவனது வாழ்க்கை
முற்றுப்புள்ளியென மாறுவதில்
பெருமகிழ்ச்சி கொள்கிறான்.
தன் காலடியில்
மருண்ட விழிகளுடன் வானமும்,
தலைமயிர் கற்றைக்குள்
கதறி அழுகின்ற
பச்சைக் கடலும் அவனுக்கு
மிகுந்த உவப்பளிக்கிறது.
ஆதாம் ஏவாள் இருவரும்
அவனது குற்றவாளிக்கூண்டில்
தலைகுனிந்து நிற்கின்றனர்.
முதல் மனிதனின் இரண்டாம் தவறில்
ஜனித்தவன் நான் என்கிறான்.
கன்னத்தில் வழிந்தோடும்
கர்த்தனின் கண்ணீர் பிசுபிசுத்தபோது
கனவு கலைந்தவன்
இப்போது
தன் பிறப்பை கொண்டாடுகிறான்.

10 comments:

said...

இறப்பை கொண்டாடும் குணமும்
கவிதை கொள்ளும் தருணங்களும் படைப்பின் ஜனனத்தை சிறப்பாக்குகின்றன்.

said...

நண்பா ஒவ்வொரு முறையும் வியந்து போகிறேன்,இப்படி கூட கவிதை எழுதமுடியுமா என்று,அருமையான வரிகள்.

said...

நன்றி ராஜா,

நன்றி அடலேறு :)

said...

அழகு...
முழுமையாக புரியவில்லையெனினும்

said...

purinthaalum puriyavillai yenbathey unmai!!

said...

muthal thavaru...
apple saappittathaa?

said...

apple kulla antha vilangu...(sollak koodap pidikkaathu)
!!!!

yeppadi ippadi poruththamaa select seiyureenga?

kavithai moththama appadiye puriyalanaalum...padam sollum kathai perazhagu:)

said...

kekirennu thappa ninaikkaatheenga nilaa....

photo maaththiyirukkeenga?

athu yaaru?
thiruvalluvaraa?

said...

நன்றி அசோக்.

இரசிகை,

அது வள்ளுவர் அல்ல.
கவிச்சக்கரவர்த்தி!

said...

o...kamban!!

valluvarukku kondai illaiyennu paarththen:)

viththiyaasamathaan irukku... vaazhththukal!!!