Sunday, January 03, 2010

துயரத்தின் முதல் பாடல்





அறைக்குள் நுழைந்த
இருளின் கீற்றுகளில்
பயணப்பட்டு வந்தது
நீ விட்டுச்சென்ற
கடைசி பார்வை.
மணலாய் கிடந்த
என்னுருவம்  உயிர்பெற்று
ப்ரியங்களுடன் அப்பார்வையை
தொட முயன்றபோது,
காலடியில் முகம் மறைத்து
கிடந்த வெளிச்சம்
இரண்டாக பிளந்து
என்னை
உள்ளிழுத்துக்கொண்டது.
நிரந்தர இருளில்
இசைக்க துவங்குகிறேன் 

உனக்கான துயரத்தின்
முதல் பாடலை..

18 comments:

said...

Good one Nila.

But again a sad one.

said...

க‌விதை மொழி ந‌ன்று

said...

படமும் வரிகளும் அருமை......

said...

நன்றி ஜெகதீசன்,லாவண்யா.

said...

nice...!

said...

நன்றி சங்கவி.

said...

நன்றி இரசிகை,பல நாட்களாக ஆளையே காணோம்? :)

said...

;)

said...

கவிதை வரிகள் நன்று.
துயரத்தை எடையிட்ட கனமான கவிதை!!!

said...

nice.
:)
vidhya

said...

நன்றி நண்பர்களே.

said...

வெண்ணிலா வானில் வரும் வேளையில்
நான் தனித்திருந்தேன்.
எண்ணிலா கனவுகளில் எதைஎதையோ
நினைத்திருந்தேன்.

said...

m... naan oorukku poiyirunthen..:)

said...

sometimes yr lyric is ambiguous.point of thought is unclear
ie enna uruvaga paduthareenganu theriyala

said...

Aazhmanadhil engo oru moolayil valikkinrathu, antha valiyulum oru sugatthai unarginrean........

- Priya

said...

அழகு .

நான் கவிதையை சொன்னேன்

said...

Nalla Irukku Nilaraseegan.....
Ella Varigalum mae rombae nalla irukku....

said...

அருமையான் வரிகள்