Tuesday, October 05, 2010

லஷ்மண் - ஆஸ்திரேலியர்களின் கொடுங்கனவு




ப்பொழுதெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா எதிர்கொள்கிறதோ அப்பொழுதெல்லாம் அவர்களது முதல் கவலை லஷ்மணை எப்படி அவுட் ஆக்குவது என்பதுதான். உலக அணியினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஆஸியின் மிக முக்கிய பந்துவீச்சாளர்கள் கூட பேட்டிங் செய்வது லஷ்மண் எனில் சற்றே தயங்குவார்கள். காரணம்,2001ல் ஆஸியின் தலையெழுத்தையே  மாற்றி அமைத்த லஷ்மணின் 281 ரன்கள். நிச்சயக்கப்பட்ட தோல்வியிலிருந்த அப்போட்டியில் லஷ்மண் விஸ்வரூபமெடுத்து அற்புதமாக ஆடியதில் வெற்றியை தட்டிப்பறித்தது இந்தியா.
 
உலகின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான ஸ்டீவ் வா(க்)கிற்கு கூட லஷ்மண் ஆட வந்துவிட்டால் தலைசுற்றும். மற்ற அணியியுடனான போட்டிகளில் சாதுவாக விளையாடும் லஷ்மண் ஆஸியுடனான போட்டிகளில் தன்னுடைய 200% ஆட்டத்தை வெளிப்படுத்துவார். மறுபக்கம் வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும் நங்கூரமாக நிற்பார்.

இன்று மொகாலியில் இந்தியா பெற்றிருக்கும் வெற்றிக்கு சச்சின் அடித்த 98 ரன்களும்,இசாந்த்சர்மாவின் மிக முக்கிய 31 ரன்களும் 3 விக்கெட்டுகளும்,ஜாகீர் கானின் 8 விக்கெட்டுகளும் முக்கிய காரணியாக இருப்பினும் தாளாத முதுகு வலியுடன் வலிநிவாரண மருந்தை உட்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி லஷ்மண் அடித்த 73 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் சென்னையில் அடித்த 136 அதிஅற்புத ரன்களுடன் இந்த 73 ரன்களை ஒப்பிட்டு சொல்லமுடியும்.

இந்திய அணியின் ஜென்டில்மேன்களாக கும்ளே,டிராவிட்,சச்சின் போன்றவர்களை குறிப்பிடலாம். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தலைகாட்டும் லஷ்மணும் ஒரு ஜென் டில்மேன் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மைதானத்திற்குள் வரும் முன் இசை கேட்டபடி அமர்ந்திருப்பார் லஷ்மண். மிக அமைதியான லஷ்மணை அணியில் எல்லோருக்கும் பிடிக்கும். இன்றைய போட்டியில் ஒரு ரன் எடுக்க வேண்டிய தருணமொன்றில் ஓஜா ரன் ஏதும் எடுக்க வில்லை என்பதற்காக அவரை சத்தமிட்டு திட்டினார் லஷ்மண். காரணம் இந்த போட்டியை சொற்ப ரன்களில் இழக்க அவர் தயாரில்லை. திட்டியபோதும் சில நிமிடத்தில் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டு தோள்களில் தட்டிக்கொடுத்தார். அதுதான் லஷ்மண்.

Wrist shot,pull shot போன்றவற்றை எப்படி விளையாட வேண்டும் என்பதை லஷ்மணின் ஆட்டத்தை பார்த்து இளம் வீரர்கள் தெரிந்துகொள்ளலாம். சேவாக் சச்சின் போன்று லஷ்மண் அதிரடியான ஆட்டக்காரர் இல்லை.ஆனால் அவர்கள் இருவரிடமும் இல்லாத "ஸ்டைல்" லஷ்மணின் ஆட்டத்தில் காண முடியும். தலைசிறந்த இசைக்கலைஞனொருவன் இரவின் ஏகாந்தத்தில் வயலின் வாசிப்பதற்கு ஒப்பானது லஷ்மணின் ஆட்டத்தின் அழகு.

லஷ்மணின் 16 சதங்களில் ஆறு சதம் ஆஸிக்கு எதிரானது. அவர் பார்மில் இல்லாத போதுகூட ஆஸியுடன் டெஸ்ட் தொடர் இருக்குமெனில் உடனே தேர்வாளர்கள் லஷ்மணை தேடி ஓடுவார்கள். அவர்களுக்கு தெரியும் லஷ்மண் அணியில் இருந்தாலே போதும் ஆஸ்திரேலிய அணியினரின் மன உறுதியை கலைத்துவிடலாமென்று. உலகமெங்கும் வெற்றிகளை குவித்த ஆஸி கேப்டன் ரிக்கிபாண்டிங் இதுவரை இந்திய மண்ணில் ஒரு வெற்றியை கூட ருசித்ததில்லை. இன்று நடைபெற்ற போட்டியிலாவது வென்றுவிடலாமென்று கனவில் மூழ்கியிருந்திருப்பார். அவரது கனவின் குறுக்கே வழமைபோலவே பேருருவம் கொண்டு நின்றவர் லஷ்மண். சில வீரர்கள் ஓய்வு பெறும்பொழுது சில அணிகள் பெருமூச்செறியும். சனத் ஜெயசூர்யா ஓய்வை அறிவித்தபோது இந்திய அணியினர் நிம்மதி பெருமூச்சுடன் உறங்கியிருப்பார்கள். வார்னே ஓய்வு பெற்றபோது இங்கிலாந்து அணியினர் நிம்மதி அடைந்திருப்பார்கள். அதுபோல், லஷ்மண் என்கிற ரன் எந்திரன் ஓய்வு பெறும்போதுதான் ஆஸ்திரேலிய அணியினரும்,ரசிகர்களும் நிம்மதி அடைவார்கள். கிரிக்கெட் சரித்திரத்தில் லஷ்மண் என்கிற நட்சத்திரத்தின் கொல்கத்தா ஆட்டமும் மொகாலி ஆட்டமும் எப்போதும் மினுமினுத்துக்கொண்டே இருக்கும்.

லஷ்மண் பற்றி ப்ரெட் லீயிடம் ஸ்டீவ் வா சொன்னதாக உலவும் ஒரு வாசகத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்:

"If you get Dravid,Great.If you get Sachin,Brilliant.But if you get Laxman,its a miracle"

-நிலாரசிகன்.

18 comments:

said...

உங்கள் கவிதை போல இந்த விமர்சனமும் இருந்தது ..

said...

கிரிக்கெட் அரிவும், ஆர்வமும் அவ்வளவாக எனக்கு இல்லையென்றாலும் , எழுதிய ஸ்டைல் ரசிக்க வைக்கின்றது.

said...

உங்கள் எழுத்து அந்த டெஸ்ட் மேட்ச் போன்றே நல்ல விறுவிறுப்பு...

//ரன் எந்திரன்//--அட..!

V V S LAXMAN is a 'Very Very Special Lifeline' in the Indian batting order. He removed all the nails from Ricky Ponting's fingers through the day.

said...

டெஸ்ட் மேட்ச் போன்றே விமர்சனமும் நல்ல விறுவிறுப்பு...

said...

Nice post

said...

He is Very Very Special against Australians always..

said...

//தலைசிறந்த இசைக்கலைஞனொருவன் இரவின் ஏகாந்தத்தில் வயலின் வாசிப்பதற்கு ஒப்பானது லஷ்மணின் ஆட்டத்தின் அழகு.
///

absolutely

said...

"The day on which Lax retires, will be announced as National Holiday in Australia" - a nice one from twitter

said...

நேற்றைய மேட்சை போலவே நல்லதொரு விமர்சனம்.

said...

//தலைசிறந்த இசைக்கலைஞனொருவன் இரவின் ஏகாந்தத்தில் வயலின் வாசிப்பதற்கு ஒப்பானது லஷ்மணின் ஆட்டத்தின் அழகு.//

//ரன் எந்திரன்//

and the finishing touch is excellent!!

Hope you too enjoyed the game :)

said...

நல்ல கட்டுரை

said...

செம மேட்ச்! அது லஷ்மண் சூப்பர்தான்! 2 விக்கெட் வச்சு ஜெயிச்சாங்க! பாருங்க! சூப்பர்!

said...

நன்றி நண்பர்களே :)

said...

A small correction Nila, You told Australia never won any test series in India. Australia won the last test series in India.

said...

// Antony Prakash said...

A small correction Nila, You told Australia never won any test series in India. Australia won the last test series in India.//

Antony,
I dint say Australia never won a series in India. I said the below sentence:

உலகமெங்கும் வெற்றிகளை குவித்த ஆஸி கேப்டன் ரிக்கிபாண்டிங் இதுவரை இந்திய மண்ணில் ஒரு வெற்றியை கூட ருசித்ததில்லை.

Ricky ponting never won a match against India in India as Captan.

said...

ippadillaam neenga sonna naan therinjukkuven nila...:)

said...

good aesthetic poems.carry on ur own way

said...

good aesthetic poems.carry on ur own way