Wednesday, October 27, 2010

காவியத்தின் முதல் வார்த்தை



1.
சிந்தனையின் பிறப்புத்துவாரம்
வழியே வெளியேற
முயன்று கொண்டிருக்கிறது
வார்த்தையொன்று.
சிறு முட்களால் சூழ்ந்திருக்கும்
அவ்விடம்
உதிரம் குடிக்கும் புலமென்பதை
அறிந்துகொள்ளாமல்.
காயங்களுடன் வெளியேறிய
அந்தியில்
அவ்வார்த்தையை புணர
காத்திருந்தன வாக்கிய சைத்தான்கள்.
ஒரு காவியத்தின்
முதல் வார்த்தை
மரணம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

2.

நான்கு சுவர்களுக்குள்
சுற்றி சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டுச்சென்ற இறகு
நான்.

3.

வெகு தூர பயணத்தின்
முடிவில் எதுவுமில்லை
அவனிடம்.
கொஞ்சம் ஞாபகங்களும்
ஒரு காய்ந்த மலரையும்
தவிர.
காலமொரு உடல் தின்னும்
இருண்ட கரையான்.

-நிலாரசிகன்.

14 comments:

said...

Sema Strong!!!

said...

வெகு தூர பயணத்தின்
முடிவில் எதுவுமில்லை
அவனிடம்.
கொஞ்சம் ஞாபகங்களும்
ஒரு காய்ந்த மலரையும்
தவிர.
காலமொரு உடல் தின்னும்
இருண்ட கரையான்.//
கவிதை arumai .
வாழ்த்துக்கள்.

said...

நன்றி சரவணன்..

நன்றி பிரபா..

said...

>>நான்கு சுவர்களுக்குள்
சுற்றி சுற்றி வரும்
ஏதோ ஒரு பறவை
விட்டுச்சென்ற இறகு
நான்<<

"எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?" நியாபகம் வந்த்தது.

said...

Ovvoru varthaigalum Migavum arumai...

- Chandra

said...

கவிதைகள் அருமை..

said...

3-kkum 3 sabaash...!!

vaazhthukal nila...:)

Anonymous said...

நல்லா இருக்கு ...

said...

please puriyaramadhiri sollunga.

said...

கவிதைகள் அருமை.

said...

Nilavai Rasikka Rasikarkal Palar undu..... Athupol
NilaRaseeganin Rasanaiyai Rasikkum Oru Vinmeenaga Nan....
Endrum Olirum Nilavin Rasippin Ninaivaga Irukka Asai......

said...

kavithaigal romba nala iruku nilaraseegan...


//காலமொரு உடல் தின்னும்
இருண்ட கரையான்//

unmai thaan...

said...

காலமொரு உடல் தின்னும்
இருண்ட கரையான்

Wow!!

said...

Superb ..