Monday, November 08, 2010

படித்ததில் பிடித்தது:

அந்தக் குழந்தையின் காலோசை
நம்மை அழைக்கிறது.

குழந்தையின் வடிவம் நம்
பார்வைக்குப் புலப்படவில்லை.

நம்  கலவரம்,நம் பதற்றம்
நம் பார்வையை மறைக்கிறது.

தன் காலோசையால்
நம்மை அணைத்துக்கொள்ள
அந்தக் குழந்தை நம்மைத்
தேடி வருகிறது.

நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.

- சுந்தர ராமசாமி.
(சுந்தர ராமசாமி கவிதைகள் நூலிலிருந்து)

4 comments:

said...

அருமை. நலமா..?
பகிர்விற்கு நன்றி.

said...

Nalla kavithai.

said...

நாம் நம் தத்தளிப்பை மறைக்க
மேலும் உரக்கப் பேசுகிறோம்.//
சரியான கிரகிப்பு

said...

//மேலும் உரக்கப் பேசுகிறோம்.//


intha mudivil..,
melum-ngira vaarththaikku sabaash podath thontrukirathu.

pakirvirkku nantri...
vazhthukal nila:)