Tuesday, November 09, 2010

இரவின் சருகுகள் இசைக்கும் மழை நாளில்..




1.

உலகின் மிக கனமான
பொருளை நான் சுமந்து வந்தேன்.
மார்பில் ஊர்ந்து உடலெங்கும்
பரவி உயிரின் வேரில்
அமர்ந்துகொண்டது அப்பொருள்.
பின்,
அதனுடன் ஓர் உரையாடல்
ஆரம்பமானது.
இலை பிரியும் தருணம் பற்றியும்
நீள் கனவொன்றின் உதிரம் பற்றியும்
உரையாடி சலித்தபோது
அதன் எடை குறைய துவங்கியிருந்தது.
நீராலான அதன் பெயரை
கண்ணீரென்று நீங்கள் உணரும்போது
விலங்கின் உருவிலிருந்து
பறவையாக
மாறியிருக்கும் என் தேகம்.

2.

பெயரில்லா இந்த உலர்ந்த
இரவை முத்தங்களால்
நிரப்பிக்கொண்டிருக்கிறது மழை.
பல நாட்கள் பத்திரப்படுத்திய கனவுகள்
ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிப்பது
பற்றிய கவலையேதுமின்றி
முத்தமிடுகிறது மழை.
மெளனம் கிழித்து வார்த்தைகள்
வெளிக்குதித்தோடி மறைகின்றன.
தியானவெளியில் வெண்ணிற
உடையுடன் அலைகிறாள் அவள்.
தன் நிர்வாணம் கண்டு வெட்கி
மறைகிறது மழை.
இரவின் சருகுகள் உதிர்கின்ற
மூன்றாம் சாமத்தில்
உனக்கொரு கடிதம் எழுத
அமர்கிறேன் நான்.

3.
பூக்களால் நீ அலங்கரிக்கப்பட்டிருக்கிறாய்
இறுகத் தழுவிக்கொண்டு நெற்றியில்
ஓர் ஒற்றை முத்தமிட நினைத்து
தோற்கிறேன்.
நம்மிடையே காலம்
அழுகிய புன்னகையுடன் நிற்கிறது.
உயிருடன் நம் வண்ணத்துப்பூச்சி
புதைக்கப்படுகிறது.
நாம் செல்லவேண்டிய
பாதைகள் நம் அனுமதியின்றி
அடைக்கப்படுகின்றன.
வெவ்வேறு திசையில் ஆரம்பமாகும்
பயணத்தில்
நீ
மழையின் நடுவே நடந்து செல்கிறாய்.
நான்
மழையாதலின் சாத்தியக்கூறுகள் பற்றிய
சிந்தனையில் ஆழ்ந்து மறைகிறேன்.

 -நிலாரசிகன்.

17 comments:

said...

மூன்றாவது கவிதை மிக மிக அருமை!!

2nd: மெளனம் கிழித்து வார்த்தைகள்
வெளிக்குதித்தோடி மறைகின்றன.
and
இரவின் சருகுகள் உதிர்கின்ற
மூன்றாம் சாமத்தில்
உனக்கொரு கடிதம் எழுத
அமர்கிறேன் நான்.

இந்த வரிகள் ரொம்ப நல்ல இருக்கு!

Keep it up!!

said...

//பெயரில்லா இந்த உலர்ந்த
இரவை முத்தங்களால்
நிரப்பிக்கொண்டிருக்கிறது மழை.//


அருமையான ரசனை. கவிதை முத்தமிடுகிறது. வாழ்த்துக்கள்

said...

நன்றி நண்பர்களே..

said...

Kavithaigal ovv ondrum miga arumai...

/*மெளனம் கிழித்து வார்த்தைகள்
வெளிக்குதித்தோடி மறைகின்றன.
தியானவெளியில் வெண்ணிற
உடையுடன் அலைகிறாள் அவள்.
தன் நிர்வாணம் கண்டு வெட்கி
மறைகிறது மழை.*/

Migavum arumayana varigal...

Regards,
Chandra

said...

மூன்று கவிதைகளுமே மிகவும் நன்றாக இருந்தன!

said...

கவிதை மிக அருமை.

said...

அற்புதம்.. அற்புதம்.. :) :) :) :)

said...

நிலாரசிகன் அவர்களுக்கு...

கடந்த நான்கு வருடங்களாக உங்களது கவிதைகளை தொடர்ந்து படித்து வரும் தீவிர வாசகி நான். கடந்த இரண்டு வருடங்களில் உங்கள் கவிதைகள் உச்சநிலையை எட்டியிருப்பதாக உணர்கிறேன்.நவீன கவிதைகள் எழுதும் தற்போதைய இளம் கவிஞர்களில் நீங்களே முதன்மையானவரும் முக்கியமானவரும் ஆவீர்.வாழ்த்துக்கள்.
உங்கள் கவிதைகளின் ரசிகை.

said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

said...

மூன்று கவிதைகளும் மிக அருமை.. முதல் கவிதை மிகவும் பிடித்தது.. வாழ்த்துகள்..

said...

//உயிருடன் நம் வண்ணத்துப்பூச்சி
புதைக்கப்படுகிறது//

சோகத்தை கூட இத்தனை நளினமாய் பகிர்தல்..ஒரு கவிஞனுக்கு மட்டுமே சாத்தியப்படுகிறது...

said...

மூன்று கவிதைகளுமே அருமை

said...

just now got to read your blog.. its really amazing.. hats off to all your writings.. keep going !!

said...

இன்றுதான் உங்கள் தளம் வந்தேன் போலும் மிக மிக அருமை . இந்த சிறியவளின் பாராட்டுக்க்ளும்,
மென்மேலும் வளர வாழ்த்துக்களும் உரித்தாகுக.

said...

//
கண்ணீரென்று நீங்கள் உணரும்போது
விலங்கின் உருவிலிருந்து
பறவையாக
மாறியிருக்கும் என் தேகம்.
//

//இரவின் சருகுகள் உதிர்கின்ற
மூன்றாம் சாமத்தில்
உனக்கொரு கடிதம் எழுத
அமர்கிறேன் நான்.
//

//
வெவ்வேறு திசையில் ஆரம்பமாகும்
பயணத்தில்
நீ
மழையின் நடுவே நடந்து செல்கிறாய்.
நான்
மழையாதலின் சாத்தியக்கூறுகள் பற்றிய
சிந்தனையில் ஆழ்ந்து மறைகிறேன்.
//

intha mudivukal yellaam asaththal...:)

vaazhthukal nila......!!

said...

நன்றி கெளரிப்ரியா,நித்யா,நிலாமதி,நிலாவன்,இரசிகை,சுபா,ers..

said...

உங்கள் படைப்பு அருமையான ரசனை,

"தியானவெளியில் வெண்ணிற
உடையுடன் அலைகிறாள் அவள்.
தன் நிர்வாணம் கண்டு வெட்கி
மறைகிறது மழை"

"நீ
மழையின் நடுவே நடந்து செல்கிறாய்.
நான்
மழையாதலின் சாத்தியக்கூறுகள் பற்றிய
சிந்தனையில் ஆழ்ந்து மறைகிறேன்"