
தனக்கென வாழ்வதில் ஒரே ஒரு வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
பிறர்க்கென வாழ்வதில் ஓராயிரம் வாழ்க்கை அடங்கியிருக்கிறது.
சென்னை பூந்தமல்லியில் உள்ள
காந்திஜி மறுவாழ்வு மையத்தில்வழி தவறி வந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள்,வறுமையினால்
கைவிடப்பட்டவர்கள் என்று மொத்தம் 22 குழந்தைகள் உள்ளனர்.(ஒரு குழந்தையால் பேச முடியாது)
திரு.வானரசு(இவருடைய தந்தையால் துவங்கப்பட்டதுதான் காந்திஜி மறுவாழ்வு மையம்)
இந்த குழந்தைகளை கவனித்து வளர்த்து வருகிறார்.
இவர் ஒரு முன்னாள் அரசு பள்ளி ஆசிரியர். இந்தக் குழந்தைகளுக்காக தன் வேலையை
துறந்துவிட்டு முழு நேரமும் இவர்களை கவனித்துக் கொள்கிறார்.
இவர்களுக்கு சரியான வசதியின்றி மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
கடந்த மாதம் இவர்கள் தங்கி இருந்த வீட்டை காலிசெய்துவிட்டு சுமார் இருபது
நாட்கள் அரசு பள்ளி வளாகத்திலும்,அரசு பொதுமருத்துவமனை வளாகத்திலும்
தங்கி இருந்தனர்.மழையால் மிகவும் துன்புற்றனர்.
தற்சமயம் பூந்தமல்லியில் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு மாத வாடகையாக
ரூ 4,500 கொடுக்க வேண்டும்.
இந்தக் குழந்தைகளில் பலர் இலவச அரசு பள்ளியில் படித்தாலும் இரு குழந்தைகளை
ஆங்கில கான்வென்ட் பள்ளியில் சேர்த்துள்ளனர்.(இவர்கள் இருவருக்கும் மாதம் 500 ரூ கட்டணம் செலுத்தவேண்டும்.) அதில் ஒரு சிறுவன்
70 திருக்குறளை அழகாக
சொல்கிறான் - பெயர். கோகுல். வயது - 4

ஒவ்வொரு குழந்தைகளின் கண்களிலும் பெயர்சொல்லத் தெரியாத ஒருவித சோகம் வழிகிறது.
கோகுலத்தில் கோபியர்களில்
மடியில் விளையாடியவனை
இறைவன் என்கிறோம்.
இங்கே மழையிலும் பசியிலும்
தவிக்கும் கோகுலை
என்னவென்று சொல்வது?நெஞ்சில் ஈரம் இருந்தால் உதவுங்கள் தோழர்களே.
பணம் அனுப்ப விரும்பும் அன்பர்கள் இந்த முகவரிக்கு அனுப்பலாம்.
Indian Bank Account Number :
450345237 Name: Gandhiji Rehabilitation Centre
Branch : Thirumazhisai
Postal Address:Gandhiji Rehabilitation Centre.
603,Trunk Road,
poonamallee,
Chennai-56 Mobile:
9840931530
கனத்த நெஞ்சுடன்,
நிலாரசிகன்.