Friday, January 11, 2008

காதல் பொங்கல்!




காதல் பொங்கல்!

1.உன் வீட்டில் பொங்கல்
கொண்டாடுவதில்லையென்று
வருந்துகிறாள் உன்
இளைய சகோதரி.
சர்க்கரைப்பொங்கலின் தங்கையடி
நீ என்று சொல்ல நினைத்து
முடியாமல் தவிக்கிறேன்
நான்.

2.கட்டிக் கரும்பு
நீ எனக்கு என்கிறேன்.
எப்படி என்று வினவுகிறாய்
விழிகளால்.
இழுத்தணைத்துக்கொள்கிறேன்.
கட்டிக் குறும்பு நீ
எனக்கு என்று காதோரோம்
முணுமுணுக்கிறாய்
நீ.

3.காளையை அடக்கியதால்
வீரன் என்று சொல்கிறது
இந்த உலகம்.
கன்னுக்குட்டி உன் அழகை
என் கண்ணுக்குள் அடக்க
தெரியாமல் விழிக்கிறேன்
நான்.

4.பொங்கலை கையில்
வைத்துக்கொண்டு கா கா என்று
காக்கைகளை அழைக்கிறாய்.
இதென்ன குயில்
கரைகிறதே என்று வியக்கின்றன
காகங்கள்.

-நிலாரசிகன்.

(அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:)

10 comments:

said...

//
காளையை அடக்கியதால்
வீரன் என்று சொல்கிறது
இந்த உலகம்.
கன்னுக்குட்டி உன் அழகை
என் கண்ணுக்குள் அடக்க
தெரியாமல் விழிக்கிறேன்
நான்.
//
பாத்துய்யா விழி பிதுங்க்கிட போவுது!!!

Anonymous said...

Karumbai Suvaitha Unarvu Ungal Kavithaigalai vaasikkum podhu.

Endrum Ungal Ezhuthugalin Raseegai,
Kadhal Devathai.

said...

Karumbai Suvaitha Unarvu Ungal Kavithaigalai vaasikkum podhu.

Endrum Ungal Ezhuthugalin Raseegai,
Kadhal Devathai.

said...

//சர்க்கரைப்பொங்கலின் தங்கையடி
நீ என்று சொல்ல நினைத்து
முடியாமல் தவிக்கிறேன்
நான்.
//

அது சரி :)

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் தோழரே!

said...

sarkarai pongal pola enimayai ungal kavithaigal...

said...

//
பொங்கலை கையில்
வைத்துக்கொண்டு கா கா என்று
காக்கைகளை அழைக்கிறாய்.
இதென்ன குயில்
கரைகிறதே என்று வியக்கின்றன
காகங்கள்.
//
அட! மிகவும் இரசித்தேன் :)

உங்களின் கவிதைகளைப்பற்றி கூறவேண்டியதில்லை...
நிறைய இரசித்திருக்கிறேன்.
பாராட்டும் தகுதி எனக்கில்லை, என்றும் நிலாஇரசிகனின் கவிதைகளுக்கு இரசிகன் நான்.

said...

தோழரே,

பொங்கள் கவிதையில் காதல் பொங்(கலோ)கோ ஓ பொங்(கள்)கு என்று பொங்குகிறது…

இனிய பொங்கள் நல்வாழ்த்துக்கள்,
தினேஷ்

said...

//
இதென்ன குயில்
கரைகிறதே என்று வியக்கின்றன
காகங்கள்.
//

I love this lines..

said...

எப்பொதும் போல் அழகான கவிதைகள் ... பொங்கலிளும் கூட நீங்கள் காதலை மறக்கவில்லை ... அதர்க்கு பாராட்டுக்கள் ...

(தமிழ் என்டு இணைய பெயர் வைத்து கொண்டு .... தமிழை கொள்கிறென் என்டு கொவம் கொள்ளாதிர் ... சிரு வயதில் இருந்து வெலி நாட்டில் வசிபதினால் நானாக தான் தமிழை பொருக்கி படிக்க வேண்டியதாக இருக்கு ... என் தமிழை வளர்த்துகொள்ள தான் இப்படி பட்ட வலை பூக்கலில் சுத்துகிறேன் ... நன்றி ...)

said...

அனைவருக்கும் எனது நன்றிகள்.