
அத்தனை தேர்வுகளிலும்
தேர்ச்சி பெற்றார்
பாட்டி.
வேலைக்காரனுக்குரிய
அத்தனை தேர்வுகளிலும்
தோல்வி அடைந்தார்
தாத்தா.
அடுக்களை கிடைத்தது
பாட்டிக்கு.
திண்ணை கிடைத்தது
தாத்தாவுக்கு.
மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.
7 comments:
Valikirathu manasu.. palli vayathil en varavirkaga chocolate-tutan kathiruntha thathavai-um, ammavirkku mel kavanithu, naan vunavarunthatha pothu kavalai padum pattiyei -um ninaikum pothu!!!!
நெஞ்சைத் தொடும் வரிகள்...
நன்றி பிரஹாரிகா,சேது.
//மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.//
உங்கள் உணர்வின் வலியால் எழுதப்பட்ட இந்த கவிதையை படிக்கும் அனைவரையும் உணர வைக்கும்..
தினேஷ்
//மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.//
இவைகளை பேனாவில் மையிட்டு எழுதினீரா இல்லை கண்ணீர் விட்டு எழுதினீரா?
//மறக்கப்படுதலின் வலியை
மறைக்க இயலாமல்
மரணத்தை சுற்றியே
சுழல்கிறது தாத்தாவுக்கும்
பாட்டிக்கும் இடையேயான
உரையாடல்.//
இவைகளை பேனாவில் மையிட்டு எழுதினீரா இல்லை கண்ணீர் விட்டு எழுதினீரா?
Post a Comment