சலசலப்பற்ற நதியை
உணர்வுகளின்றி நகரும்
உச்சிவெயில்பொழுதுகள்
நினைவூட்டுகின்றன...
இரவின் நீட்சியை
காற்றில் கையசைத்து
குறைத்திட முயன்று
தோற்கிறது தென்னைமரக்கீற்று..
குழந்தைமை மாறா சிரிப்புக்குள்
மறைந்துகொள்கிறது
மூளைவளர்ச்சியற்ற கன்னியொருத்தியின்
ஆடைவிலகிய அங்கங்கள்...
எழுத்தில் வடிக்காவிட்டாலும்
எங்காவது எழுதப்பட்டுக்கொண்டே
இருக்கின்றன கவிதைகள்...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல கவிதை.
ஆனால் கடைசி பத்தி மேலுள்ள பத்திகளுடன் ஒட்டவில்லையோ என்றொரு சந்தேகம்.
குழந்தைமை மாறா சிரிப்புக்குள்
மறைந்துகொள்கிறது
மூளைவளர்ச்சியற்ற கன்னியொருத்தியின்
ஆடைவிலகிய அங்கங்கள்...
(aanal avalaiyum thayakki vidukirargalae nam aangal nila ?!
yevlo vethainaiyana visayam ithu?)
senthil
Post a Comment