Tuesday, April 22, 2008

கல்லெறியப்பட்ட கனவுகள்...


கதவிடுக்கில் சிக்கிய விரலென உன் பிரிவில் நசுங்கிய என் காதலில் வழிகிறது ஞாபகரத்தம்..


உனக்குத் தந்த முத்தங்களை மறக்கடித்துவிட்டது காலம். காதோரம் முணுமுணுக்கிறது முத்தமிட்டபோது காற்றில் கலந்த சிணுங்கல்சப்தம்.


கடல்போன்றது நம் காதல் என்று நீ சொன்னபோது புரியவில்லை,நீந்தத்தெரியாதவன் நானென்று.


இந்த பின்னிரவில் ஜன்னலோர தென்னைமர கீற்றில் விழுந்துதெரிக்கும் மழைத்துளிகளின் சப்தங்கள் வருடம் பல கடந்துவிட்ட காதலை நினைவூட்டுகிறது.


ஒரு ஆத்ம நேசிப்புக்காக ஏங்கித் தவித்த பொழுதில் தலைகோதும் மென்விரல் தந்து நெஞ்சோடுஅணைத்து காதல்தீபம் ஏற்றினாய்.

நீ ஏற்றிய தீபத்தில் சாம்பலானது மட்டும் என் கனவுகள்...


நெடுஞ்சாலையில் வேகமாய் பயணிக்கும் உனக்கு, சாலையோரம் வீழ்ந்த பூக்களின் நலம்விசாரிக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.


கண்ணாடித்தொட்டிக்குள் நீந்துகின்ற தங்கமீனுக்கும் எனக்கும் அதிகம் வித்தியாசமில்லை.


எப்பொழுதும் என் நினைவுகளில் நீ இல்லை என்பது நிஜம். எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.


இலையுதிர்காலத்திலும் செழித்து பூக்கள் சொரிந்த மரமாக நின்றிருந்தேன் அருகில் நீ இருந்தபோது.

இன்று வசந்தகாலத்திலும் பட்டமரமாய் வேர்களின்றி விழுந்து புலம்புகிறேன்.


நினைக்க மறக்காதே,மறக்க நினைக்காதே என்று நீ எழுதிய கடிதங்களை நினைத்து அவ்வப்போது சிரிக்கவும் செய்கிறேன்.உனக்கென் நன்றிகள்.


சாதியும்,மதமும் எதிரியாக வந்திருந்தால்கூட வென்றிருப்பேன். உன்னை தோற்கடித்து காதலில் ஜெயிக்க சொன்னாய் நீ.


யுத்தமிட்டு ஜெயிக்க இது தேசமல்ல. நேசம் என்று சொல்லிவிட்டு திரும்பிவந்தேன்.வீதியெங்கும் இறைந்து கிடக்கின்றன காயப்பட்ட என் கனவுகளின் மிச்சங்கள்...

18 comments:

said...

// எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.//


//யுத்தமிட்டு ஜெயிக்க இது தேசமல்ல. நேசம் //


அற்புத வரிகளின் கோர்வை!
கலக்குறீங்க தலைவா!

said...

நன்றி சுரேகா..:)

Anonymous said...

ஒவ்வொரு வரியிலும் அழுத்தமான நினைவுகள்...Superb.

said...

முதன்முறை உங்கள் வலைப்பூவை ரசிக்கிறேன்..

நிலவின் குளிரொளி பொல் வார்த்தைகளில் அத்தனை மென்மை.. வாழ்த்துக்கள்.

Anonymous said...

எப்பொழுதும் என் நினைவுகளில் நீ இல்லை என்பது நிஜம். எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.

கல்லேறியப்பட்ட கனவுகள் - வலிகள்

செல்லா

said...

nalla kavithaikal. kasappum kaazhppum illatha, aasaikalum, nirasaikalum, aathangangalum mattume therikira intha kavithaikalukku umakku yen parattukkal. valarka.

said...

Lingering remincence of love lost

arputham

said...

வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்.

said...

//நினைக்க மறக்காதே,மறக்க நினைக்காதே என்று நீ எழுதிய கடிதங்களை நினைத்து அவ்வப்போது சிரிக்கவும் செய்கிறேன்.உனக்கென் நன்றிகள்//

அழுத்தமான ஆழமான வலிகளை கொண்ட வரிகள்...

தினேஷ்

said...

உணர்வுகளை அப்படியே சொல்லும் அழகான வரிகள் வாழ்த்துக்கள் நிலாரசிகன்!

// எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.//


//யுத்தமிட்டு ஜெயிக்க இது தேசமல்ல. நேசம் //


அற்புத வரிகளின் கோர்வை!
கலக்குறீங்க தலைவா!

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

said...

Ningal Eluthiya Kavithaigal, ovaru nenjilum puthainthirum urakamana unarvugal, ninaivugalum kuda, maraka mudiyatha varigal...
Ungalin padaipil enaku piditha kavithai "KALERIAYAPATA KANAVUGAL".
Menmulam ungal kavithai payanam thodara intha rasigaiyin manamarntha Vaalthukkal.....

said...

ningal aluthiya kavithiyai avaluku puriya vandum endru anupinen purinthathu avaluku avalin unarvu puriyali kadasi vari enn unarvu ethu than valkai endru unarthiya ungal kavithaiku enn manaam sarpanam

said...

//நெடுஞ்சாலையில் வேகமாய் பயணிக்கும் உனக்கு, சாலையோரம் வீழ்ந்த பூக்களின் நலம்விசாரிக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.//

//இலையுதிர்காலத்திலும் செழித்து பூக்கள் சொரிந்த மரமாக நின்றிருந்தேன் அருகில் நீ இருந்தபோது.


இன்று வசந்தகாலத்திலும் பட்டமரமாய் வேர்களின்றி விழுந்து புலம்புகிறேன்//

சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்.

said...

jui red ur blog

dont boil ur neck

somebody put something on ur head

change and deconsruct ur style

u will boom

said...

i dont know whether u r a poet 0r poem machine

said...

super sir...........

said...

அருமையான வரிகள். நெடுஞ்சாலையில் வேகமாய் பயணிக்கும் உனக்கு, சாலையோரம் வீழ்ந்த பூக்களின் நலம்விசாரிக்கும் என்னை அடையாளம் தெரிய வாய்ப்பில்லை.

கடல்போன்றது நம் காதல் என்று நீ சொன்னபோது புரியவில்லை,நீந்தத்தெரியாதவன் நானென்று.

said...

எப்பொழுதும் என் நினைவுகளில் நீ இல்லை என்பது நிஜம். எப்பொழுதெல்லாம் உன் பூமுகம் நினைவில் மலர்கிறதோ அப்பொழுதெல்லாம் வாடிவிடுகிறேன் நான்.

Fantastic lines..