Friday, May 02, 2008
மொழியில்லாத் தருணங்கள்...
தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..
வெகுநாட்கள் கழித்து வீடுதிரும்புகையில்
கால்சுற்றும் நாய்க்குட்டியின் பார்வையில்..
தேங்கிய மழைநீரில் மிதக்கின்ற
வாடிய மல்லிகைப்பூக்களில்...
தொலைதூர பயணத்தின் வழியனுப்புதலில்
வழிகின்ற கண்ணீர்த்துளியில்...
புணர்ந்த களைப்பில் நெஞ்சிலுறங்கும்
துணையின் மூச்சுக்காற்றில்...
மொழியில்லாத் தருணங்களிலும்
பிறக்கத்தான் செய்கின்றன
கவிதைகள்..
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லா இருக்குங்க.
மிக்க நன்றி சுந்தர்.
" இந்த மெல்லிய வரிகள்
என் வல்லிய இதயத்தை வருடியதால்
துள்ளியது என் எண்ணம்"
- அட இந்த ரசிகனின் கவிதையை படிக்கும் போது கூட
ஏதோ பிறக்க தான் செய்கிறது
அருமை தோழரே...
தினேஷ்
நல்ல கவிதை என்பது அதை படிப்பவரையும் அதே போல் எழுதத்தூண்டும் என எங்கோ படித்திருக்கிறேன். அந்த ஆற்றல் உங்கள் கவிதைக்கு உண்டு..
நன்றிகள் பல ஜே.கே,தினேஷ்,ரூபஸ்.
மொழியில்லாத் தருணங்களிலும் பிறக்கும் மொழி தான் கவிதைன்னு அழகா சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்குங்க.
//
தளர்ந்த விரல்பிடியை நடுநிசியில்
இறுக்கிக்கொள்ளும் குழந்தையில்..//
கவிதை எழுத தெரியாதவங்களைக் கூட எழுத வைக்குதே!
மொழியில்லா தருணங்களை பகிர்ந்து கொள்வதற்கு தான் கவிதைன்னு அழகா சொல்லியிருக்கீங்க.
கவிதை என்னை மிகவும் பாதித்து விட்டது.
கவிதையை வாசிக்கும்போது வாசகன் தன்னுள் அதைப் போன்ற ஒரு கவிதையை எழுத முயற்சிப்பது தான் மிகச் சிறந்த கவிதை இது அதில் ஒன்று
செந்தில்நாதன்
Post a Comment