Friday, May 23, 2008

குறுங்கவிதைகள் - பாகம் -5



1.குழாயடி சண்டை
தாகத்தில் தவித்தன
வரிசைக் குடங்கள்.

2.கிராமத்து வீட்டின்
நீரில்லா கிணற்றுக்குள்
தளும்புகிறது
பால்யத்தில் தொலைத்த
பந்துகளின் நினைவுகள்.

3.கல்நெஞ்சு மாமியார்
கண்ணீர் வடிக்கிறாள்
நெடுந்தொடருக்கு நன்றி.

4.தூண்டில்புழுவுக்காக அழுதது
மனம்
மீனைச் சுவைத்தபடி.

5.கொளுத்தும் வெயிலில்
விளையாடுகிறது நிலா
குழந்தையுருவில்.

6.உதிர்கின்ற பூக்களை
நிழல்கொண்டு தாங்குகிறது
மரம்.

7.இலவச தண்ணீர்பந்தலில்
விற்றுக்கொண்டிருந்தார்கள்
கட்சியை.

5 comments:

said...

ஒவ்வொன்றும் முத்துக்கள்...சும்மா கலக்குது...
அன்புடன் அருணா

said...

ஒவ்வொன்றும் முத்துக்கள்...சும்மா கலக்குது...
அன்புடன் அருணா

said...

நன்றி அருணா

said...

இரண்டாவது கவிதையை ரசித்தேன்.

said...

//கிராமத்து வீட்டின்
நீரில்லா கிணற்றுக்குள்
தளும்புகிறது
பால்யத்தில் தொலைத்த
பந்துகளின் நினைவுகள்//

ந‌ல்லா இருக்குங்க‌ நிலா :)