Thursday, May 15, 2008

Aphorism - ஒரு முயற்சி

ஆங்கிலத்தில் Aphorism என்று இதனை சொல்வார்கள். கவிதையென இவற்றைக் கொள்ள இயலாது. என் கன்னி முயற்சி இது பிழை இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

  • படிக்கட்டில் உருண்டு இறந்த குழந்தையை நினைவூட்டுகிறது இலையில் இறங்கும் பனித்துளி..
  • மலையுச்சியில் நின்று இவ்வுலகமே என் காலடியில் என்றேன்.சிரித்துக்கொண்டே நகர்ந்தன மேகங்கள்.
  • தவறவிட்ட கண்ணாடியின் சில்லுகளை பொறுக்கினேன். முகம் காண்பித்தன சில. ரத்தம் கேட்டன சில.
  • அம்மாவின் கண்ணீர்த்துளிக்குள் ஒளிந்திருக்கிறது அப்பாவின் முரட்டுத்தனமும் பிள்ளைகளின் இயலாமையும்.
  • முட்டிக்காயத்தில் துடிக்கும் பிள்ளைக்கு மருந்திட ஓடும் தாயின் காதுகளுக்கு கேட்பதில்லை பசித்தழும் குழந்தையின் அழுகை சத்தம்.

1 comments:

said...

மிகவும் நன்றாக வந்துள்ளது.. வாழ்த்துக்கள். இப்போதெல்லாம் இங்கணம் இதை பிரித்தறியா வண்ணம் கவிதைகள் என ஒருமித்துச்சொல்பவரே அதிகம்...