Friday, May 16, 2008
கல்லூரித்தோழி..
கல்லூரிக்காலத்தில்
எப்போதும் என்னுடனிருந்தாய்..
தேர்வுகளில் நான் தேர்ச்சிபெற
கோயில்களில் தவமிருந்தாய்...
தோற்றபோதெல்லாம் தோள்தந்து
உற்சாகமூட்டும் தென்றலாயிருந்தாய்...
கல்லூரியின் கடைசிநாளில்
உணவருந்தாமல் கண்ணீர்சிந்தும்
சிலையாகியிருந்தாய்...
வருடங்கள் பல கடந்துவிட்டபின்
ஒரு ரயில்நிலையத்தில்
உன்னைச்சந்திக்கிறேன்...
என் நலம் விசாரித்து,
கைக் குழந்தையுடன்
கணவன் பின் செல்கிறாய்.
நகர்கின்ற ரயிலை
நோக்கி விரைந்தோடுகிறேன்
என் கல்லூரித்தோழியை
உன்னில் காணாத
கண்ணீருடன்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//நகர்கின்ற ரயிலை
நோக்கி விரைந்தோடுகிறேன்
என் கல்லூரித்தோழியை
உன்னில் காணாத
கண்ணீருடன்.//
அடிக்கடி நடக்கும் யதார்த்தம்.
அன்புடன் அருணா
//என் நலம் விசாரித்து,
கைக் குழந்தையுடன்
கணவன் பின் செல்கிறாய்//
எங்கிருந்தாலும் வாழ்க...
அது தான் வாழ்கை......
அது தான் வாழ்கை......
Post a Comment