Thursday, April 10, 2008
புலம்பெயர்ந்தவனின் விதி!
காற்றில் அடித்த
சன்னல்க்கதவுகளின் பேரோசையில்
திடுக்கிட்டு விழித்தழுகிறது
தொட்டில்குழந்தை...
அடைமழை நாட்களில்
தூரத்து இடியோசைகேட்டு
நாற்காலியின் அடியில்
ஓடி ஒளிகின்றாள்
நான்குவயது மகள்...
கதவு தட்டப்படும்
போதெல்லாம்
நடுங்க ஆரம்பிக்கிறது
பாட்டியின் தேகம்..
ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் புலம்பெயர்ந்த
பின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஈழத்தின் அதிர்வலைகள்.
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஆயிரம் மைல்களுக்கு
அப்பால் புலம்பெயர்ந்த
பின்னும்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஈழத்தின் அதிர்வலைகள்.
அருமையான வரிகள்.....
Senthil Kumar,
Bangalore.
ஈழத்து தமிழனின்
அழுகுரல்கள்...
நெஞ்சை அரிக்கின்றன...
வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்.
நம் ஈழ சகோதர சகோதரிகளின் கண்ணிரின் ஈரம் கவிதையாய் பதியப்பட்டுயிருக்கிறது...
தினேஷ்
Post a Comment