Thursday, April 17, 2008
பேச்சிலர் கவிதைகள்...
1.கொடுக்கல் வாங்கலின்
திருப்தியின்மையை
மெளனத்தால் பேசுகிறான்
அறைத்தோழன்.
2.கலைத்துப்போட்ட அறையிலும்
கலையாமலிருப்பது நிறைய
கனவுகளும் ஒருத்தியின்
நினைவுகளும்.
3.சலவைக்கு போய்வந்த
சட்டைக்குள் ஒளிந்திருக்கும்
மறந்த ரூபாய் நோட்டில்
வெண்மையாகிறது ஒரு
கறுப்பு விடியல்.
4.நேர்முகத்தேர்வில்
தோற்று திரும்பும்பொழுதெல்லாம்
மனசுக்குள் சத்தமிடுகிறது
அம்மாவின் பிராத்தனையும்
அப்பாவின் மெளனக்கண்ணீரும்.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
முதல் கவிதையை மிகவும் ரசித்தேன்
அருமையான கவிதை, அற்புதமான கருத்து. வாழ்த்துக்கள் நண்பரே.
மிக்க நன்றி முரளி,சரவணன் :)
//கலைத்துப்போட்ட அறையிலும்கலையாமலிருப்பது நிறையகனவுகளும் ஒருத்தியின்நினைவுகளும்//
அனுபவமோ !!!! - கவிதை கற்பனனை என்னபார்கள் ...ஆனால் இது உண்மை ...
நீர் உண்மை கவிங்கனோ!!!!!!! :))
அருமையான கவிதைகள்....
Senthil Kumar,
Bangalore
நன்றி ஜே.கே.
simple and great!!
/நேர்முகத்தேர்வில்
தோற்று திரும்பும்பொழுதெல்லாம்
மனசுக்குள் சத்தமிடுகிறது
அம்மாவின் பிராத்தனையும்
அப்பாவின் மெளனக்கண்ணீரும்/
அருமையான வரிகள்
bachelor varththaikku thamizh ennavo?
azhagana kavithai
innum sollalam
வாழ்த்திய நண்பர்களுக்கு எனது நன்றிகள்.
@உமாகுமார்,
பேச்சிலர் - பிரம்மச்சாரி.
சலவைக்கு போய்வந்த
சட்டைக்குள் ஒளிந்திருக்கும்
மறந்த ரூபாய் நோட்டில்
வெண்மையாகிறது ஒரு
கறுப்பு விடியல்.
naan palamurai anubavitha nigalvu ithu.. kavithaiyai rasikirane ippothu..
senthil
உணர்வுள்ள வரிகள்...
தினேஷ்
//நேர்முகத்தேர்வில்
தோற்று திரும்பும்பொழுதெல்லாம்
மனசுக்குள் சத்தமிடுகிறது
அம்மாவின் பிராத்தனையும்
அப்பாவின் மெளனக்கண்ணீரும்//
யதார்த்தம்...
கவிதைக்கு எல்லா நேரங்களிலும் கற்பனை தேவை இல்லை! நிஜமே போதும்! உங்களோடைய இந்தக் கவிதைகள் அப்படித்தான்
Post a Comment