Friday, June 12, 2009

கடைசியாய் ஒரு கேள்வி



"கவிதை எழுதும் நீங்கள் அசைவம் சாப்பிடலாமா?"
"குட்டிக்கதை மூலம் நீங்கள் சொல்லவருவது என்ன?"
"கவிதையில் மென்மையாக எழுதும் நீங்கள் கோபபடலாமா?"
"மொழிகளை துறந்து மெளனி என்றால் ஊமை என்று அர்த்தமா?"
"உன் கிளையில் பழம் தின்ன வந்த கிளி என்று என்னைத்தானே சொன்னாய்?"
"Motivational பாடல்கள்தான் பிடிக்குமா?"


32 கேள்விகளுக்கு பதில் எழுதிய பதிவினால் இதுபோன்ற அதிமேதாவித்தனமான/புத்திசாலித்தனமான(!!) கேள்விகளை மடலில் பெற்றேன்.

வைரமுத்துவின் "இதனால் சகலமானவர்களுக்கும்" புத்தகத்திலிருந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன "கவிஞன் தாய்ப்பாலை பற்றி எழுதினால்,வாசகன் அதன் அங்கம் பற்றியே நினைத்துக்கிடக்கிறான்".

நதிபோலே ஓடிக்கொண்டே இருத்தலை விரும்பும் மனதிற்கு இதுபோன்ற தேவையற்ற கேள்விகளை எதிர்கொள்வது எப்படி என்று புரியவில்லை.

எழுதுகின்ற எல்லாவற்றிற்கும் விளக்கம் கேட்கும் அபாயசூழல் எப்போது விலகும்
என்கிற கேள்வியுடன் இப்போது நான்.

4 comments:

said...

உலகத்தில் உள்ள படைப்பாளிகள் அனைவரும் எதிர் கொள்கிற பொதுவான கேள்விகள் இவை, இவற்றிற்கு நாசூக்காக நிஜமாகவோ , அரசியல் தனமாகவோ பதில் சொல்ல தெரிந்தவர்கள்தான் புகழ் பெறலாம் மற்றவர்கள் எல்லாம் சிறந்த படைப்பாளிகள் ஆக இருந்த்துவிட்டு போகவேண்டியதுதான்..
படைப்பாளிகள் என்று எல்லா துறையையும் சொன்னேன்.
நீங்கள் எழுதும் வரை இந்த கேள்விகள் வந்து கொண்டே இருக்கும் , ஏன் நானே கூட கேட்கலாம்..
இந்த கருமாந்திரத்தை எல்லாம் சகிக்கத்தான் வேணும் நண்பரே .

said...

saththamaaga sirithuvittu vittu vidungal..
mudinthaal kettavargalukku sabaash sollungal..
anthak kelvikalukkum azhagaa pathil solla muyarchi seiyungal..

simple..:)

said...

:-)


!!!!!!!!!!

said...

http://priyamudanvasanth.blogspot.com

இங்கு வந்து தங்கள் வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள் நண்பரே