
வடிகின்ற கண்ணீர்த்துளியுடன்
மரமொன்றை செதுக்கிக்கொண்டிருந்தான்
அந்த தச்சன்.
கூடை நிறைய முட்கள்
சுமந்து தள்ளாடியபடி
இருளுக்குள் மறைந்தாள்
ஒரு மூதாட்டி.
வழிந்தோடும் ரத்தத்தை
கனவுகளில் தெளித்து
உறங்கினர் குழந்தைகள்.
நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.
5 comments:
:-(
:~(
"மழையில்லா முன் தினம்..."
//நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.//
Nalla Iruku....
naan ennathanga solluven..
vaayadachip poitten...
aanaal..onnu ithu neengathaan yezhuthiningalaanu ketkamaatten:)
vazhththukal nila..
//நாளை அவன்
அறையப்படுவதற்காக
மெளனமாய் காத்திருக்கிறது
சிலுவையொன்று.//
ஆழமான வரிகள்..!
Post a Comment