Monday, March 08, 2010

பாவனைப் பெண்



அன்பின் கண்ணாடி

தெரிந்தே நிகழவிருக்கும் பிரிவை
ஒரு மழைத்துளியாக்கி உன்னிடம் கொண்டுவருகிறேன்.
கடலடியில் நகரும் ஆழ்ந்த மெளனத்துடன்
என்னை எதிர்கொள்கிறாய்.
அறுந்து விழுகின்ற சொற்களுடன்
தடுமாறும் என் கரம் பற்றுகிறாய்.
உனக்கென நான் கொணர்ந்த
மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது.
தெரிந்தே தவற விடுகிறோம்
நம் மகத்தான அன்பின்
கண்ணாடியை.
உனக்கும் எனக்கும் இடையில்
மெல்ல எழுகிறது
காலத்தின் கறுப்புச்சுவர்.

இறந்தகால சொற்கள்

ஒரு மணிநேரம் தொடர்ந்தது
பின்
அரைமணியாக குறைந்தது
இப்போது
எப்போதாவது என்றாகிவிட்டது.
ப்ரியங்களால் மினிமினுக்கும்
நம் பழைய கணங்களை தேடி
அலைபேசிக்குள் அமிழ்கிறேன்
அங்கே
மூர்ச்சையாகி கிடக்கின்றன
வர்ணமிழந்த நம்
வார்த்தைகள்.

பாவனைப்பெண்

மலர்களால் அலங்கரிக்கப்பட்டிக்கும்
அறைக்குள் உடல் உருவும் வாசத்துடன்
நுழைகிறாய்.
கிளையிலிருந்து விடுபடும் இலையென
என்னிலிருந்து நீங்குவதான பாவனையுடன்
கைகுலுக்குகிறாய்.
பின்,
நடனமிட துவங்குகிறாய்.
மிச்சமின்றி சிகப்புநிற திரவத்தை அருந்துகிறாய்.
சந்தோஷத்தின் உச்சத்தில் நிற்கிறாய்.
அனைத்தும் முடிந்து
வாசற்கதவை நெருங்கும் தருணத்தில்
சத்தமிட்டு அழுகிறாய்
ஒன்றும் நடந்துவிடாத
உன் பாவனைகளை
கழுவுகிறது பரிசுத்தமான
கண்ணீர்த்துளிகள்.
இனி,
சந்தோஷமாக விடைபெறலாம்
நீ.

-நிலாரசிகன்.

10 comments:

said...

நித்ரையின் சொப்பனத்தில் வந்தமர்ந்து, சல்லியம் செய்கிறாள் இந்த பாவனைப்பெண்

said...

:) நன்றாக இருந்தது நிலா.. நேற்று உங்களை எதிர்பார்த்தேன்!!

said...

மிகவும் அருமை...

said...

மிகவும் அருமை...

said...

அருமை அருமை

said...

மயக்குகிறாள் பாவனைப் பெண்!

said...

நன்றி நண்பர்களே.

said...

yellaame nallaayirukku...nila!

said...

//உனக்கென நான் கொணர்ந்த
மழைத்துளி கடலாகி நம்மைச் சூழ்கிறது//

Fantastic!!!

said...

Nandri Rasigai