Thursday, March 04, 2010

செந்நிற பூக்கள் சூடிய சிறுமி

 

 பிணத்தின் வாடை
காற்றில் நிரம்பி வழிந்துகொண்டிருக்கிறது.
மீளமுடியாத சாபத்தினால்
துன்பிக்கிறான்
கருநிற வண்டின் சாயல் கொண்டவன்.
பாசிபடிந்த குளமொன்றில்
ஒற்றை சூரியனால் மலர்ந்திருக்கின்றன
நான்கு தாமரைகள்.
உண்மையை மறைப்பதற்கும்
பொய் ஒன்றை உரைப்பதற்குமுள்ள வித்தியாசங்களை
வரிசைப்படுத்துகிறாள்
செந்நிற பூக்கள் சூடிய சிறுமி.
தூரத்தில்
தன் இரண்டு நாள் குட்டியை
தின்றுகொண்டிருக்கிறது
ஒரு வெள்ளை முயல்.

5 comments:

said...

அருமை அருமை.. வியந்தேன்..

said...

வாழ்த்துக்கள்

said...

நல்லா இருக்கு. ஆனா, நெஜமாவே புரியலங்க. என்ன சொல்ல வர்றீங்க...?

Anonymous said...

I didnt understand. Whats conveyed in the last 4 lines?

said...

puriyala...