மதுரையிலிருந்து நெல்லை சென்று
கொண்டிருந்தேன் கடந்த வாரத்தில்
ஒரு நாள்.
பேருந்து பயணம். கூட்டம் அதிகம்
மூன்று மணி நேரமாக நின்று கொண்டே
பயணித்தேன்..
அப்போது கால்வலி மறந்து,
தூரம் மறக்க
என் செல்பேசியில்
எழுதியது இக்கவிதைகள்
1. "எளிதில் தீப்பற்றும்
பொருட்களை பேருந்தில்
கொண்டு செல்ல தடை"
என்று எழுதி வைத்துவிட்டு
பார்த்தாலே பற்றிக்கொள்ளும்
விழி கொண்ட உன்னை
மட்டும் பயணிக்க அனுமதிக்கும்
இந்த நடத்துனர் மீது
பயங்கர கோபம் எனக்கு!
2."பயணச்சீட்டு இல்லாமல்
பயணித்தால் 500 ரூபாய்
அபராதமாம்"
பேருந்தில் ஏறியதிலிருந்து
என் இதயத்தில் எந்த
பயணச்சீட்டும் இல்லாமல்
பயணிக்கும் உன் விழிகளுக்கு
அபராதமாக எதைக் கேட்பது?
3.உட்கார இடமிருந்தும் நீ
ஏன் நின்று கொண்டே
பயணிக்கிறாயென தவித்தபோதுதான்
உணர்ந்தேன்
"மகளிர் மட்டும்" அமர
இடமுண்டு
"தேவதை மட்டும்" என்றில்லையே!
Saturday, September 02, 2006
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
உன்னை நிற்கவைத்து கவிதை படைக்கவைத்த பாண்டியன் பேருந்து கழகம் வாழ்க
அட போடவைக்கும் கவிதைகள்
அதிலும்
/*
உட்கார இடமிருந்தும் நீ
ஏன் நின்று கொண்டே
பயணிக்கிறாயென தவித்தபோதுதான்
உணர்ந்தேன்
"மகளிர் மட்டும்" அமர
இடமுண்டு
"தேவதை மட்டும்" என்றில்லையே!
*/
இது வழமை போல் அசத்தல் ரகம்
All your kavithai are very nice to read. Your DEVATHAI is very lucky. Your Love for your DEVATHAI is something different and great.
பிரமாதம் !!!
அடடே, பேருந்தின் ஒவ்வொரு வாசகத்தும் ஒரு கவிதையா?! வெகு அழகு :)
Post a Comment