Tuesday, April 01, 2008
குறைப்பிறவி
உயிர்த்தெழுதல் சாத்தியமற்று
தூசிக்குள் புதைந்துகிடக்கிறது
அரங்கேறா கவிதைகள் சில..
கவிதைகளின் மெல்லிய
விசும்பல்சப்தம்
செவிக்கருகில் ஒலித்து
ஓய்கிறது தினமும்...
ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//ஓடித்திரியும் பிள்ளையைவிட
ஊனப்பிள்ளைமீதே
தாய்பாசம் அதிகமென்று
உணர்த்த இயலாமல்
தோற்கிறேன் நான்.//
நல்ல வரிகள்.
அரங்கேறாத அந்த
சில கவிதைகள்
அங்கீகாரம், அபிப்பிராயம்
எனும் தேவைகளற்று
மனத்தின் எல்லையிலேயே
வைத்து போற்றப்பட வேண்டியவை
வலிகளோடு.
அழகிய வரிகள்...
:) ஓடித்திரியும் பிள்ளைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள், மனமிருந்தால் மார்க்கமுண்டு!
அழகிய கவிதை!
Post a Comment