Thursday, April 02, 2009

சுயம் பற்றி மூன்று கவிதைகள்:



1.எல்லோரும் வந்து
செல்லும்
பேருந்து நிலைய
கழிப்பிடமா
என் சுயம்?

2.வந்த நிமிடம் முதல்
பேசிக்கொண்டே இருந்தாள்
அவள்.
பேசவேண்டியதென்று அவள்
பட்டியலிருந்தவற்றை
எல்லாம் பேசி முடித்தாள்.
எல்லாம் முடித்தபின்
ஏனிந்த மெளனமென்று
வினவினாள்.
பார்வையாளனா நண்பனா
என்கிற கேள்வியின்
இடைவெளியில் நின்றுகொண்டிருந்தேன்
நான்.

3.எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.

-நிலாரசிகன்.

15 comments:

said...

எப்பொதும் போல் உங்கள் கவிதை
மூன்றும் அழகு.

kalaivani said...

நிலா ரசிகருக்கு......

ஏன் இந்த வருத்தம்.........
எல்லா வரியிலும் சோகமே தெரிகிறது.....
//1.எல்லோரும் வந்து
செல்லும்
பேருந்து நிலைய
கழிப்பிடமா
என் சுயம்?//

கலைவாணி...

said...

ஆ.முத்துராமலிங்கம்
எப்போதும் என் கவிதைகளுக்கு முதல்ரசிகனாய் பின்னூட்டமிடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

கலைவாணி,
இது சோகத்தின் வெளிபாடு அல்ல. ஒருவித விரக்தியின் வெளிப்பாடு எனக்கொள்ளலாம்.

said...

இப்படித்தான் “கழிகிறது” வாழ்க்கை

என்ன செய்வது.

கவிதை மூன்றும் மூன்று முத்துக்கள்

மூன்றாவது இயல்பாய் நகர்ந்து மனதில் ஒட்டிக்கொள்கிறது.

said...

நிலா!
உங்கள் கவிதைகளில்
இப்பொழுது பிரிவின்
சோகம் அதிகமாய்
தொனிக்கிறது!
எந்த ஒரு படைப்பாளிக்கும்
தனிமை ஒரு வரம்!
உங்கள் எழுத்துக்கள்
மென் மேலும் வளம் பெற
வாழ்த்துக்கள்!
- சரோ.

said...

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா,சரவணன்.

said...

கவிதைகள் மூன்றுமே அருமை
அண்ணா

எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.


நகர்த்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கையை ...

said...

எங்கிருந்தாலும் தொடர்ந்து வருவேன்
அருகிருக்க
சம்மதித்தால் சோகத்திலும்
கூட

said...

"எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது."

reading these lines made me reflect that I am going through " ennai enakke pidikala" phase...but I guess like all things change , this probably would too..

L

said...

//எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.
சிலநேரங்களில்
என்னை எனக்கு
பிடிக்காமல் போகிறது
பிடித்தும்போகிறது.
இவை எதைப்பற்றிய
பிரக்ஞையுமின்றி
நகர்ந்துகொண்டிருக்கிறது
வாழ்க்கை.//

எல்லோருக்கும் பிடித்த விதமாய் இருந்துவிட்டால்தான் ஒரு பிரச்னையுமே இல்லையே!!!
அன்புடன் அருணா

said...

நன்றி நிலாவன் தம்பி,L,அன்புடன் அருணா.

நிலாவன்,
மலேஷியாவிலிருந்து இந்தியா எப்போது செல்கிறாய்? தனிமடலிடு தம்பி.

L,
உங்களது "ennai enakku pidikala" phase விரைவில் முடிவடையட்டும்.

said...

\\எல்லோருக்கும் பிடித்தவனாய்
அல்லது
பிடித்தவளாய் இருந்துவிட
முடிவதில்லை.\\

யதார்த்தமான உண்மை:)

கவிதை வரிகள் அனைத்தும் அருமை!

said...

Very nice poems

said...

ungal kavithaikal yennaku migavum

pidikirathu

ippoluthu mudhal ungal rasikan naan

niranjana said...

mudravathu kavidhai super