Thursday, April 16, 2009

Chicken a la Carte - குறும்படம்

ஆறு நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இந்த குறும்படம் தருகின்ற வலி மிக அதிகம்.

உணவுவிடுதிக்கு இருபெண்கள் வருகிறார்கள்.கோழிக்கறியும் சாதமும் ஆர்டர் செய்கிறார்கள். கொஞ்சமாய் கொறித்துவிட்டு மீதம் வைத்துவிட்டு செல்கிறார்கள்.

அங்கே வருகின்ற ஒருவர் அந்த மீதமான கறியை ஒரு வாளியில் எடுத்து செல்கிறார்.
தன் வீட்டிற்கு செல்கின்ற அவரை, அங்குள்ள குழந்தைகள் சந்தோஷமாய் ஓடிவந்து மொய்த்துக்கொள்கிறார்கள்.

[இந்தக்காட்சியிலிருந்து எழும்புகின்ற இசையும் அதன் வரிகளும் கல்நெஞ்சையும் உருக வைத்துவிடும்.]

அந்த கோழிக்கறிக்காக வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். இவர் ஒவ்வொருவருக்கும் தட்டில் உணவை எடுத்து வைக்கிறார்.மலர்ந்த முகத்தோடு குழந்தைகள் அதனை தொட எத்தனிக்கும்போது தடுத்துவிட்டு,கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு சாப்பிட சொல்கிறார்.

பசியால் தினம் தினம் ஆயிரக்கணக்கில் உலகெங்கும் மடிகிறார்கள். இது ஒரு நிஜ கதை என்கிற டைட்டிலோடு முடிகிறது படம்.

சமீபத்தில் பார்த்த குறும்படங்களில் என்னை மிகவும் பாதித்த படம் இது.பார்த்துமுடித்து சில மணி நேரங்கள் எதுவும் செய்ய இயலாமல் மனம் கனத்து போனது.
பாரதியின் வரிகள் நினைவுக்கு வந்தன.நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

குறும்படத்திற்கான சுட்டி:

http://www.cultureunplugged.com/play/1081/Chicken-a-la-Carte

13 comments:

said...

I feel the pain what you feel that time..

said...

சுட்டிக்கு நன்றி ரசிகன்.

said...

"நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது"

Vunmai.. :((

said...

நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!

மனது வலித்தது

Anonymous said...

மிகவும் பாதித்தது

said...

நிதர்சனம் மிக அழகாகப் படமாக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதோடு நிறுத்திவிடாமல், கொஞ்சம் யோசித்து, நடைமுறை வாழ்க்கையிலும் ஏதேனும் செய்தோமானால் இந்தக் குறும்படத்திற்கான நோக்கம் நிறைவு பெறும்.

-ப்ரியமுடன்
சேரல்

said...

உண்மை தான் நிலா ரசிகரே!

Kalaivani said...

Nila Raseeganuku....
Thanks for posting.. nega post panlana intha kurumpadam parkum vaippu kidachurukathu.......
6 nimida kurumpathil niraya unmaigal adangi iruku........
yechil pandamai iruthum kadavuluku nandri solumpothu kannir varuvathai thavirka mudiyala.........
unmai romba valikirathu.....
//நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது. வாழ்க்கை விசித்திரமானதுதான்!//
unmaiyana varigal....
-Kalaivani.

said...

anna really a good message

Arun Kumar MCA said...

Excellent.. So wat it comes to inform us. Either dont waste foods or do waste so that it ll go to some poor (or donate food??).

Anonymous said...

”எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்கு தாரும்”

இயேசு தன் சீடர்களுக்கு ஜெபிக்க சொல்லி கொடுத்த வரிகள்!!

இறைவன் தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் எச்சில் உணவைத்தான் வழங்கியுள்ளார் என்று தெரிந்தும் சாப்பிடும் முன்பாக இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு சாப்பிட கட்டளையிடும் தந்தை!

அவன் அறிவான்... இந்த உணவும் கூட கிடைக்காமல் மடியும் உயிர்கள் பாரில் அநேகம் உண்டென்று.

மிக மனதை கலங்கவைத்தது இந்த குறும்படம்.

இனி ஒவ்வொருமுறையும் உணவை வீணாக்கும்போதும் மனம் நிச்சயம் வலிக்கும்.

இதில் ஒரு முரணும் கூட எனக்கு தோன்றுகிறது நிலா!

இப்படி உணவுகள் வீணாக்கபடுவதும் கூட நியாயம் என்றே படுகிறது. அந்த உணவுகள் ஒருவேளை வீணாக்கபடாமல் போயிருந்தால்.. அன்று அந்த குழந்தைகள் பட்டினியாக கிடப்பார்களோ?!!

said...

the smile on their face , was like a slap on my face , made me realise how insignificant the problems of the priviledged really are. This could easily be a family in India. I hope people and the government reach out to unforntunate people like em and make their life a little better. The documentary broke my heart. My prayers to all my brothers out there.

said...

I can't waste my food after watching this video.

"நமக்கு எச்சிலாக தோன்றுவது வேறொரு வயிற்றுக்கு உணவாக தோன்றுகிறது"

These words are still ringing in my ears.

This video is also in Youtube:
http://www.youtube.com/watch?v=993rZrfLBjg