Monday, April 13, 2009

Winged Migration - பறத்தல் அதன் சுதந்திரம்






பருவகாலத்தில் இடம்பெயரும் பறவைகள் குறித்தான ஆவணப்படம் பற்றி எஸ்.ரா எழுதியிருந்தார். அந்த பதிவை படித்தவுடனே இணையத்தில் தேடிப்பிடித்து படத்தை பார்த்துவிட்டேன். படம் பற்றியும் அதன் உருவாக்கம் பற்றியும் எஸ்.ரா அவர்கள் நிறைய எழுதிவிட்டதால் எனக்கு பிடித்த காட்சிகள் மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

ரம்மியமான காட்சிகள்:

1.மீனொன்றை முழுவதுமாக விழுங்க முயற்சிக்கும் பறவையின் லாவகமும்,நிதானமும் மிக அற்புதமான காட்சி.
2.அமேசான் நதியின் மீது பறக்கின்ற பஞ்சவர்ண கிளிகளும் அதன் பார்வையும்.
3.அலைகளோடு குதித்தோடும் பென்குவின் பறவைக்கூட்டம்
4.தண்ணீர் மீது நடனமாடும் பறவைகள்


ரணமான காட்சிகள்:

1.சந்தோஷமாய் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் ஒவ்வொன்றாய் வீழ்ந்து மரிக்கின்றன .சில வேடர்களின் குண்டுகளுக்குப் பலியாகிறோம் என்பதை அறியாமல் வீழ்கின்ற பறவைகளைக் கவ்வி எடுத்துவர ஓடுகின்றன வேட்டை நாய்கள்.

2.ஒரு பக்க சிறகை இழந்த பறவையொன்று பறக்க இயலாமல் கடற்கரையில் அங்குமிங்கும் தத்தி தாவுகிறது.சுற்றி வளைக்கின்றன நண்டுகள்.

3.பென்குவின் பறவையின் குஞ்சை மற்றொரு பறவை கொத்தி தின்கிறது,தடுக்க இயலாத தாய்பறவை வானம் பார்த்து கதறி ஓலமிடுகிறது.(இந்தக்காட்சியின் பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது)

4.அமேசான் ந‌தியில் மித‌க்கிற‌து ஒரு ப‌ட‌கு. அதில் கூண்டுக்குள் அடைப‌ட்ட‌ குர‌ங்கு ஒன்றும் சில‌ ப‌ற‌வைக‌ளும் இருக்கின்ற‌ன‌.ம‌னித‌ன் பிற‌ உயிரின‌ங்க‌ள் மீது காட்டுகின்ற‌ குரூர‌த்தை இந்த‌ ஒரு காட்சி சொல்லிவிடுகிற‌து.

86 நிமிட‌ம் ஓடுகின்ற‌ இந்த‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ம் முடிந்த‌வுட‌ன் ம‌ன‌தில் ஏற்ப‌டுகின்ற‌ வெறுமை த‌விர்க்க‌ இய‌லாத‌து. ப‌ற‌வைக‌ளை நாம் ப‌ற‌க்க‌ அனும‌திக்கிறோமா என்கிற‌ கேள்வி ம‌ன‌தில்
தோன்றியபடியே இருக்கிறது..

பிர‌மிளின் க‌விதையோடு இந்த‌ப்ப‌திவை நிறைவு செய்கிறேன்.

"சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிக்கொண்டிருக்கிறது"

9 comments:

said...

ஆகா, உடனே அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் பதிவு. முடிந்தால் இன்றிரவே பார்த்துவிட வேண்டும். நன்றி நிலா

said...

நன்றி பிரேம். கண்டிப்பாக பாருங்கள். மிகச்சிறந்த படம்.

said...

வாவ் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். நன்றி நிலாரசிகன்

said...

கண்டிப்பா பார்க்க வேண்டும் போல இருக்கின்றது, நிச்சயம் பார்கின்றேன்.

Mani Kumar said...

can you please give me the link to download this movie?

said...

எஸ்.ரா எழுதியதைப் படித்துவிட்டு நானும் இந்த படத்தைப் பார்த்தேன். ரொம்ப அருமையாக இருந்தது. ஆனால் கொஞ்சம் தூக்கம் வந்ததை ஒத்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் ஒளிப்பதிவை பாராட்டாமல் இருக்க முடியாது. NGC, Discovery channel-களை விட ஒரு படி மேலே என்று சொல்லவேண்டும்.

said...

link kodutha nalla irukkum...

said...

http://www.youtube.com/watch?v=AnVo7lWVEaM&feature=related

said...

nandri nila rasigan! naane youtubela thedi padam pathutten. nandri