Tuesday, April 07, 2009

இரண்டாம் ஆதாம் [ அறிவியல் புனைவுக்கவிதைகள் ]





1.
வழிந்து ஓடுகின்ற வெப்பத்தின்
அளவு உயர்ந்துகொண்டேயிருந்தது.
சொற்களால் விவரிக்க இயலாத
நிறத்தில் மலையென
குவிந்திருந்தது சாம்பல்.
கரும்புகை சூழ்ந்திருக்க
பற்றி எரிந்தது நீலக்கடல்.
வீசும் காற்றில்
அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தது
நெருப்பின் சுவாலைகள்.
எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியது என்றுரைத்தான்
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி


2.
காதோரம் நடனமிடும்
செவ்விதழ்களின் ஸ்பரிசத்தில்
லயித்திருக்கும்போது
வேகமாய் தட்டப்பட்டது
அறைக்கதவு.
உள்நுழைந்த எந்திரன்
தோள்சாய்திருந்தவளைக் கண்டு
புன்னகைத்தான்.
இன்னும் நான்கு நிமிடங்களில்
மரணிக்கப்போகிறேன்
என்பதை உணர்த்தியது
மணிக்கட்டில் கட்டியிருந்த
கடிகாரத்தின் சிவப்பு விளக்கு.

3. மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.

-நிலாரசிகன்

17 comments:

said...

nice ones

said...

அருமை நண்பரே!

//எந்தையும் தாயும் மகிழ்ந்துகுலாவி
வாழ்ந்த புவியது என்றுரைத்தான்
எந்திரப்பெண்ணின் மார்பில்
முகம்புதைத்தழுதபடி//

//மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.//

அற்புதமான வரிகள்.

-ப்ரியமுடன்
சேரல்

said...

yes its true..... soon machines will live our life.....and human will become a toxic asset to this planet......

said...

அறிவியல் புனைவுக்கவிதைகள். இந்த களமே வித்தியாசமானது தான் :)

அட்டகாசமா இருக்கு கவிதைகள். வாழ்த்துகள் :)

said...

அறிவியல் புனைகவிதை.. வித்தியாசமான சிந்தனை, அதுவும் ரசிக்கும்படி எழுதியுள்ளீர்க்கள்
மூன்றுமே பிடித்திருந்தது.

//அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.//

இந்த வரிகள் கற்பனையின் வேகம்
இப்படியும் நேர்ந்து விட வாய்பிருக்கின்றது இல்லையா.

said...

//அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.//

:))

அசத்தல் வரிகள்.

said...

வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றி :)

said...

I read a lot of time.
wonderful.
with love
jagadeeswaran
http://jackpoem.blogspot.com

said...

மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.

a different thing.keep it up.

with love
jagadeeswaran.
http://jackpoem.blogspot.com/

said...

வாவ்! அற்புதமான கவிதைகள். தேர்ந்த பயிற்சியின் விளைவாக முளைத்தவை போலத் தெரிகிறது. ஆனால் ஒரு சந்தேகம், வருங்காலம் வசந்தகாலமாக இராதா? எல்லோரும் ஏன் இலையுதிர் காலமாகவே புனைவு செய்கிறீர்கள்?

said...

//வாவ்! அற்புதமான கவிதைகள். தேர்ந்த பயிற்சியின் விளைவாக முளைத்தவை போலத் தெரிகிறது. ஆனால் ஒரு சந்தேகம், வருங்காலம் வசந்தகாலமாக இராதா? எல்லோரும் ஏன் இலையுதிர் காலமாகவே புனைவு செய்கிறீர்கள்?

//

வெங்கிராஜா,

வருங்காலம் வசந்தகாலமாக இருக்குமென்று இன்னும் நம்புகிறீர்களா? தினம் தினம் குண்டுகளால் செத்து மடிகிறதே நம் மனித இனம்?

said...

@வெங்கிராஜா,

If life leads technology it will be a good future....

but technology leads human then it will not be....

Few years before (20 yrs)... computer... internet... mobile is not at all a essential factor for life....

Now it turned other way...

If i forgot my mobile or no battery the i felt like lost one hand....

if no computer for one day... i lost my brain.... because i (we) depending on these technology growth....

just for ur view... if u r in india... while traveling in bus u might see how many school kids using mobile phone....

in singapore (am here), if no air-con.. then the ppl(including indians) not preferring those buses... so gov. changed it almost all buses are nw air-con.... technology will soon make humans addict to that...

in every case.... future is a getting darker and darker every day....

some researchers stated that, this green planet will be good to live for another 150 years (max) ... soon human needs to be an alien to other planet.....

Reasons:

Global Warming, Pole's ice mountains are melting.... sea level is increasing.....

Terrorism soon led to survival of fittest, eg. USA wants to dominate the world... and attacking all other countries.....

Loneliness, now humans are moving towards virtual world... most of the USA, UK, Singapore, China children's and youngsters are becoming addict to play stations, internet and so on.. which affects their physical and mental growth...
----

bright future?

said...

நல்லாயிருக்குங்க கவிதைகள்

Anonymous said...

ரொம்ப வித்தியாசமான கற்பனை! நல்லாருக்கு! வாழ்த்துக்கள்!

said...

நிலா, ரொம்ப நல்ல வந்திருக்கு, முக்கியமா முதல் மற்றும் மூன்றாம் கவிதையை மிகவும் ரசித்தேன்.

L said...

H.G Wells ( one among my favourite authors) novel onrai vasitha thripthi yerpatadhu, ungal 10 vari kavithaigalai paditha podhu! Awesome!

-L

Kalaivani said...

Nice Poets...

Nama Mechinery Lifoda Yellaiyai Noki Poi kondu irukiromnu azhaga unga kavithaigal unerththu....

Adutha santhathila mazhai varuma varathanu theriyathu..... kandipa yelorum rasikira manvasanai irukathunu nan ninaikiraen....
Athupola vara pora lifela anukum penukum lv irukalam... but thai pasam uravugal kula ula nesam la irukumanu theriya..... yena ipova inga uravugal kudumbam yelam sidhaithu irukuthaey.......

//மழையென்பது கடந்தகாலத்தில்
புழங்கிய சொற்களிலொன்று.
மனிதனென்பவன் எப்போதோ
வாழ்ந்து மரித்த உயிரினங்களில்
ஒருவன்.
அணுக்களால் உருவான
உலகை அணுகுண்டுகள்
தின்றுமுடித்து சில ஆண்டுகள்
கடந்துவிட்டன.
அழிந்த உலகைபற்றி
எழுதியதற்காக என்னை
விசாரித்த எந்திரம்
பெயர்சொல் என்றது.
இரண்டாம் ஆதாமென்றேன்.//


romba romba azhaga iruku nila raseegan.... nala irukunu thavira vera varthai yena solrathunu theriyala.....

very very nice....

Regards
kalaivani.