
பழுத்த மஞ்சள் இலைகளை
ஒடித்துப்போடுகிறாள் வனத்தை
சுத்தம் செய்வதாக திரியும்
பாவனைப்பெண்.
பச்சை இலைகள் துயர்மிகுந்த
தலையசைப்புடன்
விடைகொடுக்கின்றன.
இளைப்பாற இலைதேடும்
வண்ணத்துப்பூச்சிகள்
வீழ்ந்து மரித்த மஞ்சள்
இலைகள் மீது வந்தமர்கின்றன.
பாவனைப்பெண்ணின் உடல்
கணப்பொழுதில்
நிறமிழந்து மண்ணில்
சரிகிறது.
அவள் உடலுக்குள்ளிருந்து
வெளியேறுகின்றன
அடர் மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சிகள்.
10 comments:
நிலா, அருமை. இந்த கவிதை எனக்காக எழுதியதா..??
Inga Pavanai Penn endru yarai kuripidiringa?
ungalathu ...kavithaigalai thinam thinam thedubavan indruthan ungalukku ennai arimugam seyyavendum endu thondriyathu ....kavithaigal arumai...keep do the same thing just for us.
அருமை அண்ணா
Miga arumaiyana kavidhai.Idayathai thodugirathu.Edho oru vivarikka mudhiyadha unarchi nenjil niraigiradhu.
நன்றி சூர்யா, இல்லை இது பொதுவான கவிதைதான் :)
கார்குழலி,
வேலை செய்வதான பாவனையில் திரியும் பெண்ணை அப்படி வர்ணித்தேன்.
நன்றி நந்து,
நன்றி தம்பி நிலாவன்.
நன்றி சாம்.
ayyo nila, thanga mudiyala.... eppadi ippadi
"வண்ணத்துப்பூச்சிகள் நிறைந்த வனம்" - miga azhagu.
padam pidichurukku.......
kavithai yenakku puriyala....
ரொம்ப நல்லா இருக்குங்க.
Post a Comment