Friday, October 09, 2009

நெஞ்சில் நிற்கும் சிறுகதைகள்



முன்குறிப்பு:


இந்தப் பதிவு சிறுகதைகள் மீது ஆர்வம் கொண்டு வாசிக்க ஆரம்பித்திருக்கும் ஆரம்பநிலை வாசக/எழுத்தாளர்களுக்கு மட்டுமே. சிறுகதைகளில் ஊறித் திளைத்த ஜாம்பவான்கள் Just close this window :)


உரையாடல் சிறுகதை போட்டி நடந்த பின்பு பலரது கவனம் சிறுகதைகளின் மீது திரும்பி இருக்கிறது.சிறுகதைகளை தேடி படிக்கும்
வலைப்பதிவு நண்பர்களும் அதிகரித்திருக்கிறார்கள். சிறுகதைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில் தேடித்தேடி படித்த பல கதைகள் எப்போதும்
மனதுக்கு மிக நெருக்கமாய் இருக்கின்றன. ஏதேனும் ஒரு பொழுதில் அவை என்னுடன் உரையாடுகின்றன.சமயங்களில் சிறுகதையில் வாழும்
கதாபாத்திரங்களுடன் நாமும் பேசுகிறோம்/சிரிக்கிறோம்/அழுகிறோம்...இன்னும் பல "றோம்".

நான் வாசித்து நேசித்த சிறுகதைகளின் பட்டியல் இது.சிறுகதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களுக்கு இவை பயன்படலாம். (சுட்டி கொடுக்க வில்லை,கதையின் தலைப்பை மட்டும் வைத்து சிறுகதைகளை தேடிப்பிடித்து வாசிக்கும் அனுபவம் அலாதியானது என்பதால்,மன்னிக்க!)

கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
காகங்கள் - சுந்தர ராமசாமி
எண்ணப்படும்(வார்த்தை இதழில் வெளியானது) - நாஞ்சில் நாடன்
செப்டிக் - சிவசங்கரி
பத்மவியூகம் - ஜெயமோகன்
புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன்
வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்
யாருமற்ற இரவு(உயிரோசை இணைய இதழில் வெளியானது) - உமா ஷக்தி
நூற்றி சொச்ச நண்பர்கள் - யுவன் சந்திரசேகர்
ஊர்வாய் (மயில் ராவணன் சிறுகதை தொகுப்பு) - மு.ஷரிகிருஷ்ணன்
சாட்டை(மணல்வீடு இதழில் வெளியானது) - கண்மணி குணசேகரன்
ஆண்கள் விடுதி அறை எண் 12 - திருச்செந்தாழை
கோடம்பாக்கம் - சாரு நிவேதிதா
காதுகள் - எழுதியவர் பெயர் நினைவில் இல்லை - ஆனந்தவிகடனில் வெளியானது
வெள்ளி மீன் - பெருமாள் முருகன்
ஆண்கள் படித்துறை - ஜே.பி.சாணக்யா
பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
கடிதம் - திலீப்குமார்
ஆகாயம்,நகரம்,ஆண்மை - சுஜாதா
கச்சை,சர்ப்ப வாசனை(புனைவின் நிழல் தொகுப்பு) - மனோஜ்
மதனிமார்கள் கதை - கோணங்கி
கன்னிமை - கி.ரா
தனுமை,தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள் - வண்ணதாசன்
எஸ்தர் - வண்ணநிலவன்
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன - எஸ்.ராமகிருஷ்ணன்
புலிக்கலைஞன் - அசோகமித்ரன்
அக்னி பிரவேசம் - ஜெயகாந்தன்
மாடுகள் - இமையம்
கடல் - பாவண்ணன்
அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
மரப்பாச்சி,அரளிவனம் - உமா மகேஸ்வரி
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
சைக்கிள்,அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
நடன விநாயகர் - சூடாமணி
சிலிர்ப்பு - தி.ஜானகிராமன்
வெயிலோடு போய் - தமிழ்செல்வன்
காடு - பா.செயப்பிரகாசம்
உயிரிடம் - அழகிய பெரியவன்
அமெரிக்காக்காரி - அ.முத்துலிங்கம்
வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
அழுவாச்சி வருதுங் சாமி - வாமு.கோமு



Extras:


மேலே பட்டியலில் உள்ளவை என் நினைவில் நிற்பவை மட்டுமே. மேலும் பிடித்த பல சிறுகதைகளின் ஆசிரியர் பெயர்கள் நினைவில் இருக்கின்றன.கதையின் தலைப்பு மறந்துவிட்டது.

இப்பதிவு எழுத அ.மு.செய்யதுவின் இந்தப் பதிவு மிக முக்கியகாரணம். அவருக்கு நன்றி.

சில சிறுகதை தொகுப்புகள் பற்றி நான் எழுதிய பழைய பதிவு இங்கே

தண்டம் - பூங்காற்று தனசேகர் எழுதிய சிறுகதை தொகுப்பு எங்கே கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பல மாதங்களாக தேடுகிறேன்.

உங்களுக்கு பிடித்த கதைகளை பின்னூட்டமிடுங்கள்.

நன்றிகள் பல :)

15 comments:

said...

வாவ் !!!!!!!! உங்க கலெக்ஷன் நல்லா இருக்கு நிலா...!!! நான் குறிப்பிட மறந்த‌
சில சிறுகதைகளையும் நினைவு கூர்ந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இணையத்தில் கொஞ்சம் தேடினால் சில கதைகளுக்கு சுட்டிகள் கிடைத்து விடலாம்.நானும்
தேடிப்பார்த்து தருகிறேன்.

உங்களின் பரந்த வாசிப்பை கண்டு வியக்கிறேன்.வாழ்த்துகள் !!! முயற்சிகள் தொடரட்டும் !!!

said...

kannamoochi ray..ray..
kandupidi ray..ray..

:)

said...

pinthodarubavarkal yennikkai...200 aagap pokuthu:)

santhosham... vazhthukkal nila!!

said...

நன்றி அ.மு.செய்ய்து
நன்றி இரசிகை

said...

நான் வாசிக்காத பல கதைகள் உங்களுடைய பதிவில் இருக்கிறது. வாங்கிவிடலாம்.

பகிர்விற்கு நன்றி...

said...

நல்ல தொகுப்பு....நன்றி நிலா

said...

படித்தது அரைவாசி, படிக்காதது அரைவாசி தங்கள் தொகுப்பில் உள்ளன. படிக்காதவற்றை தேடிப்பிடித்து படித்தாகவேண்டும். ம்ம்ம்...கண்டிப்பாக படித்துவிடுவேன் என்ற நம்பிக்கை உண்டு. தொகுப்புக்கு நன்றி நண்பரே..

said...

நல்லதொரு தொகுப்பு நிலாரசிகன்.. :) இவற்றில் ஒரு சில மட்டுமே நான் படித்திருக்கிறேன்.. இன்னும் நான் ரொம்ப தூரம் போகணும்.. அறிமுகத்திற்கு நன்றி :)

said...

பூங்காற்று தனசேரரின் கதைகள் பல பதிப்பகங்களில் வந்திருப்பதால்.. அவை சென்னையில் இருக்கும் நியூபுக்லேண்ட் மாதிரியான புத்தக கடைகளில் கிடைக்கிறது.

:)

said...

//பூங்காற்று தனசேரரின் கதைகள் பல பதிப்பகங்களில் வந்திருப்பதால்.. அவை சென்னையில் இருக்கும் நியூபுக்லேண்ட் மாதிரியான புத்தக கடைகளில் கிடைக்கிறது.//

தகவலுக்கு நன்றி பாலா சாப் :)

said...

எந்த புத்தகமாக ( பதிப்பக வெளியீடாக ) இருந்தாலும் பாலபாரதி சொன்ன நியூபுக்லேண்ட் ( டிநகர் )
உள்ள‌ க‌டையில் கிடைக்கும்.

சீனிவாச‌ன்: 044-28156006

said...

ஆம் செய்யது என் புத்தகமும் அங்கே கிடைக்கும் :)

said...

நான் எழுதியிருக்கும் வெகு சில கதைகளுள் ஒன்று உங்கள் விருப்பப் பட்டியலில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது நிலா...
நன்றி!!

said...

பகிர்வுக்கு மிக மிக நன்றி நிலா! :)

(கேணி - உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி, உரையாட முடியாதது வருத்தமே :)

கலைவாணி said...

ஹையோ எப்படிங்க... நீங்க ரசிச்ச சிறுகதைகளே நான் ஒன்னு கூட படிக்கல.... நீங்க படிச்ச மொத்த பட்டியல் பார்த்தா அவ்ளோதான்... உங்களோட கம்பேர் செய்றபோ கிணத்துகுள்ள கிடக்கிற தவளை போல இருக்கேன்.... மிக்க நன்றி நிலாரசிகன்.... இந்த சூப்பர் தொகுப்பிற்க்கு.....