Thursday, October 29, 2009

முதிர்ந்த உயிர்




தொலைபேசி அலறும்
போதெல்லாம் நடுங்கும் கைகள்.

வீட்டு ஆண்களின் சத்தம்
உயரும் கணம் ஏதோ
முனகி அடங்கும் உதடுகள்.

பின்னிரவில் வீறிட்டு அழுகின்ற
குழந்தைகளுக்காய்
பிராத்தனைகளில் மூழ்கும் மனம்.

அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்.

வாழ்வின் அந்தியில்
நாட்கள் நகர்த்தும்
வீட்டின் முதிர்ந்த உயிரை
மூத்திரவாடை பாட்டி
என்கிறோம் நாம்.

24 comments:

said...

என் பாட்டிக்கு இந்தக் கவிதை சமர்ப்பணம்.

I miss u a LOT paati :((

said...

நெஞ்சை நெகிழ்விக்கும் கவிதை.

//பின்னிரவில் வீறிட்டு அழுகின்ற
குழந்தைகளுக்காய்
பிராத்தனைகளில் மூழ்கும் மனம்.//

குழ்ந்தைகளுக்காக மட்டுமா குடும்பத்தின் ஒவ்வொரு உயிருக்காக்வும் எந்நேரமும்..

//அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்.//

அப்படியொரு நேசம் எங்கிலும் காணக் கிடைக்காது. இது எல்லோரது பாட்டிகளுக்கும் சமர்ப்பணமே.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

said...

எனது பாட்டி ஞாபகத்தைக் கிளரிவிட்டீர்கள்.

உண்மையாக இருக்கிறது.

said...

எனது பாட்டி ஞாபகத்தைக் கிளரிவிட்டீர்கள்.

உண்மையாக இருக்கிறது.

Kalaivani said...

Rombavae Nalla irukku...
ithae padikkum pothu enakum kuda enga appamma pati gnabagam thaan varuthu....
eppothum naan avaga kuda than irupaen... but now :(

//பின்னிரவில் வீறிட்டு அழுகின்ற
குழந்தைகளுக்காய்
பிராத்தனைகளில் மூழ்கும் மனம்.//

Rombavae unmaiyana varigal....
unga kavithai ellarukum avugavuga patiya oru nimisam mathu ninaika vaikum... ithu unga patikum kavithaikum kidaitha mariyathainu sollalam...

really a gud one....

manasula thondrathellam azhaga kavithaia eluthiringa.... epdi? naan unga kavithai padikka arambichathiliruthu elutha try panitu irukaen.... innum en pakathula vara matinguthu...

sorry for thanglish....
neraminayal tamila eluthala...
nandri

meenadasan said...

miga miga arumai... negizhchiyana varigal... padikum pozhudhe kan kalangugiradhu...
Vazhthukkal nila...

said...

//அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்//
avarkalin thanimaiyin vali...

//வாழ்வின் அந்தியில்//
ithuthaan NILA...!!
yenga irunthu pidikkireenga azhagaana uvamaiyin vaarththaikalai:)
remba pidiththullathu...

//மூத்திரவாடை பாட்டி
என்கிறோம் நாம்//
ITHU PETHTHAVANGA THAPPU...NUTHAAN NAAN SOLLUVEN:(

yenga "appaththa"-vin ninaivu vanthuttu...
"muthiyavarkalukkaaga yeppavum prayer seiyanum paappaanu"ippavum sollum avungalukku vayathu 84 aaguthu...:)

avungalukku inthak kavithaiyai kandippaa solluven nilaa!!

said...

//அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்//
avarkalin thanimaiyin vali...

//வாழ்வின் அந்தியில்//
ithuthaan NILA...!!
yenga irunthu pidikkireenga azhagaana uvamaiyin vaarththaikalai:)
remba pidiththullathu...

//மூத்திரவாடை பாட்டி
என்கிறோம் நாம்//
ITHU PETHTHAVANGA THAPPU...NUTHAAN NAAN SOLLUVEN:(

yenga "appaththa"-vin ninaivu vanthuttu...
"muthiyavarkalukkaaga yeppavum prayer seiyanum paappaanu"ippavum sollum avungalukku vayathu 84 aaguthu...:)

avungalukku inthak kavithaiyai kandippaa solluven nilaa!!

said...

art........remba nallaayirukku!1

said...

Vazhthukku Nandri Nanbargalae..

said...

மறக்கப்பட்டவர்கள்

said...

Thanks for the feedback Thandora Ji :)

said...

நெஞ்சைப் பிழியும் உண்மை சொல்லும் கவிதை.

said...

//அறை கடக்கும்
நிழல்களின் பின்னோடி திரும்பும்
அழுக்கற்ற நேசம்.//

மனத்தின் மூலையில் தூங்கி கிடந்த
ஒரு வலியை தட்டி எழுப்பியது
உங்கள் வலிமை வாய்ந்த வரிகள்..

not even able to close the window, it's so captivating..

said...

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி நித்யா. ஆம் காலத்தின் வேகத்தால் சில வலிகளை நாம் மறந்துவிட்டோம்.

said...

ரொம்ப அருமையான மனதை அரிக்கும் கவிதை...

said...

அருமை நிலா..

said...

நன்று ரசிகன்.!

said...

நன்றிகள் பல அருணா,சினேகிதி,ஆதி.:)

said...

கவிதை மனதை பிழிகிறது . மிக அருமை.

said...

மிக மிக அழகான வரிகள். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை. இன்றைய காலத்தில் இது மாதிரி சொந்தங்கள் இருப்பது கிடையாது. எல்லோரையும் ஒதுக்கிவிட்டு தனி குடித்தனம் சென்று விடுகிறார்கள். எல்லாம் காலம் செய்யும் சதி.

said...

அப்பா...சாகடிக்கிறீங்க நிலா!அசைய முடியல...

said...

அருமை நிலா ... அதெப்படி எல்லா பாட்டிகளும் ஒரே மாதிரி இருக்கிறார்களோ :-)

Niranjana said...

en paatiyin mugathai ninaivil niruthi vaithha entha kavidhaiku en kodi nandrigal