Saturday, April 21, 2007

ஈழக் கவிதைகள் பாகம்1

* இக்கரைக்கு அக்கரை
சிகப்பு
ஈழம்.


* கடலின் மறுபுறம்
புயல்
இங்கே தென்றல்
ரசிக்கும் கடற்கரை
மனிதர்கள்.


* மிதந்து வந்த
சிறுமியின் ஆடை
கண்டு
பெருமூச்சு வாங்கியது
தமிழகம்.
நல்லவேளை உடல்
வரவில்லை என்று.


* அகதி முகாமின்
கூரை வழியே
அழகாய்
தெரியும் நிலா.


* தோட்டாக்களுக்கு
நெஞ்சு நிமிர்த்திய
அப்பா
கதறி அழுகிறார்
"அகதி" எனும் சொல்
கேட்டு.
-நிலாரசிகன்.

2 comments:

said...

Great One

said...

ஈழக்கவிதைகள் நன்றாக அவர்களின் வலியை உணர்த்துகின்றன.

ஒரு சில கவிதைகள் மிகவும் வேதனை அடைய செய்கின்றன.

நன்றாக இருக்கின்றன.