Thursday, December 31, 2009

2009ன் சிறந்த இணைய எழுத்தாளர்கள்


 


பதிவுலகில் 2009ம் ஆண்டு சிறந்த பொதுச்சேவை செய்தவர்களை கெளரவிக்கும் இடுகையிது.


சிறுகதை போட்டியை மிக நேர்த்தியாக நடத்தியதோடு நின்றுவிடாமல் சிறுகதை பட்டறையின் மூலம் கதைகள் குறித்தான முக்கிய நூல்களையும் பகிர்ந்துகொண்டு பதிவுலக எழுத்தாளர்களை தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்தினார்கள்.
இப்போது விறுவிறுப்பாக கவிதை போட்டியும் நடந்துகொண்டிருக்கிறது. தங்களது கைக்காசை வெற்றி பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதின் வாயிலாக தனித்து நிற்பவர்கள்.
சிற்றிதழ்களின் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வரும் தீவிர படைப்பாளி.வலைத்தளம் ஆரம்பித்த பிறகு "அகநாழிகை" என்றொரு சிற்றிதழை உருவாக்கினார்.அகநாழிகை பதிப்பகத்தின் மூலமாக ஐந்து இணைய எழுத்தாளர்களை அடையாளங்காட்டியிருக்கிறார்.
தொடர்ந்து புதிய படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் தருபவர்.பல வருடங்களாக எழுதி வந்தாலும்  தன்னுடைய கவிதைகளை தொகுப்பாக்காமல் பிற எழுத்தாளர்களை உருவாக்கியதில் தனித்து நிற்பவர்.
 3.சேரல்/கிருஷ்ணபிரபு

புத்தகம் வலைப்பூவில் தன் நண்பர்களுடன் தங்களது வாசிப்பனுபவத்தை பதிவு செய்கிறார் சேரல்.ஆரம்ப நிலை வாசகனுக்கு பேருதவியாக பல நூல்களை அறிமுக படுத்துவதில் தனித்து நிற்கிறார்.

சேரலை போலவே தான் வாசித்த தமிழ் நூல்களை பிறருக்கு அறிமுகம் செய்து வருகிறார் கிருஷ்ணபிரபு.



கொத்துபரோட்டாவிலும் எண்டர் கவிதைகளிலும் புகழ் பெற்ற போதிலும் இவர் எழுதும் சினிமா வியாபாரம் தொடர் சினிமாத்துறையை A to Z அறிந்துகொள்ள உதவுகிறது. துறை சார்ந்த பதிவுகளை இத்தனை விரிவாகவும் எளிமையாகவும் வாசகனுக்கு ஏற்றார்போல் எழுதுவதில் தனித்து நிற்பவர் கேபிள்சங்கர்.

இணையத்தால் இணைந்த தம்பதிகளின் வலைப்பூ "அணிலாடு முன்றில்". சங்க இலக்கியத்தின் இறுக்கமான சட்டதிட்டங்களை தாண்டி அதனுள் இருக்கும் இன்றும் செல்லுபடியாகக்கூடிய கவித்துவத்தை விரிவாக அலசும் வலைப்பூ. நல்லதொரு முயற்சி.
 இன்னும் பலர் தங்கள் எழுத்தை மட்டும் முன்நிறுத்தாமல் தான் வாசித்த/ரசித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வதற்காக வலைப்பூக்களை உருவாக்கி எழுதி வருகிறார்கள். என் சிற்றறிவுக்கு எட்டிய ஐந்து இணைய எழுத்தாள அறிமுகம் இது.மேலும் தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள் இங்கே பட்டியலில் சேர்த்துவிடுகிறேன்.

6 . மாதவராஜ் - தீராப்பக்கங்கள்


இலக்கிய உலகம் நன்கு அறிந்த எழுத்தாளர். இணைய பக்கம் துவங்கியபின்னர் தனது வலைப்பக்கத்தின் பெயரை போலவே தீர்ந்துபோகாத எழுத்துக்கு சொந்தக்காரர். இணையத்தில் வெளியான சிறந்த படைப்புகளை(கவிதை,சிறுகதை,அனுபவம்) தொகுத்து வம்சி வெளியீடாக இவ்வருடம் வெளியிடுகிறார். இணையத்தில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பது கடலில் ஊசியை தேடுவது போல் என்பதால் இவரது உழைப்புக்கு நன்றி தெரிவிப்போம்.


7.வண்ணத்துப்பூச்சியார் 


உலக திரைப்படங்களை பல இணைய எழுத்தாளர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிமுகம் செய்தாலும் உலக திரைப்படத்திற்காக மட்டுமே வலைப்பூ வைத்திருப்பவர்.
பட்டர்பிளை சூர்யா என்ற செல்லப்பெயரால் அறியப்படுபவர். புரிவதற்கு சிக்கலான படங்களை கூட எளிமையான நடையில் எழுத்துப்படுத்தி இருப்பது இவரது சிறப்பு.



-நிலாரசிகன்.

16 comments:

said...

அருமையான தேர்வு நிலா

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

said...

காயத்திரி சித்தார்த் திருமணத்திற்கு பிறகு சரியாக எழுதாதது வருத்தம்! சித்தார்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது காயத்திரி!

said...

சித்தார்த் & காயத்ரிக்கு இப்படி ஒரு வலைபக்கம் இருப்பதே இப்போ தான் தெரியும். அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள்.

said...

நம்மளையும் லிஸ்டுல சேர்த்ததுக்கு நன்றி..

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நிலா.. :-)))

said...

//இத்தனை விரிவாகவும் எளிமையாகவும் வாகனுக்கு ஏற்றார்போல் எழுதுவதில் தனித்து நிற்பவர் கேபிள்சங்கர்//

கேபிள் வாசகனுக்கு எழுதாமல் வாகனுக்கு எழுதுகிறார் என்பதை தெளிவாக சொன்னதற்கு ரொம்ப நன்னி. ஏதோ என்னால முடிஞ்சது.

said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.

Happy New Year Nila.

said...

அறிமுகம் செய்ததற்கு நன்றி நிலா... எல்லோரும் தெரிந்தவர்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

said...

அன்புத்தம்பி!
மிக்க சந்தோஷம்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

said...

நன்றி நிலாரசிகன்.

- பொன்.வாசுதேவன்

said...

அருமையான தேர்வு

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

said...

Happy new year nila rasigan

said...

நன்றி நிலா. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

said...

நன்றி தோழரே!

மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

said...

vaazhthukal... nerththiyaai rasiththavarkkum rasikka vaiththavarkalukkum!!