Wednesday, February 10, 2010

மூன்று கவிதைகள்

 
1.

நீ தந்த பாடல்களில்தான்
அவன் ஒளிந்திருந்தான்.

நீ தந்த கனவுகளில்தான்
அவன் உருப்பெற்றான்.

நீ தந்த முத்தத்தில்தான்
அவன் அனலாகினான்.

நீ தந்த பிரிவில்தான்
அவன் புன்னகைத்தான்.

அந்த புன்னகையில்தான்
நிகழ்ந்தது
எங்கள் மரணமும்.

2.

சிறகில்லாத பறவையின்
வலியை பற்றிய உனது விவரிப்புகளில்
கடைசிவரை இடம்பெறவேயில்லை
வானம்.
நான்.
நாம்.
மற்றும்
முகம் மறைத்து அழும்
சில ப்ரியங்கள்.

3.
உனது தடங்களில் பயணிக்கிறது
நாளை  பொழியும்
மழைநீர்.
பிரிதலை சொல்லி அழுகின்றன
நாளைய காகங்கள்.
கடிகாரமுள் தன் பயணத்தை
பின்னோக்கி தொடர்ந்த
கணத்தில்
உனக்கான எனது
காத்திருப்பின் வலி மீது
வந்தமர்கிறது காற்றில்
அலையும் இறகொன்று. 


- நிலாரசிகன்




17 comments:

said...

காத்திருப்பின் வலி மீது
வந்தமர்கிறது காற்றில்
அலையும் இறகொன்று. ”
அழுத்தமான வரிகள்...

said...

நிலா இப்ப ஓகே..:))

அந்த view counter HTML ஹைஜாக் பண்றதா கேள்வி..எடுத்திடுங்க.

said...

முகம் மறைத்து அழும்
சில ப்ரியங்கள்.//

மென்மையான காதல்.
ரசிக்க வைக்கிறது

said...

கவிதை நல்லாயிருக்கு....
என் மனதிற்கு மிக பிடித்தது இரண்டாம் கவிதை.

said...

க‌விதைக‌ள் ந‌ன்று நிலார‌சிக‌ன்

said...

நன்றி நண்பர்களே.

said...

இரண்டாவதும், மூன்றாவது கவிதையும் மிகவும் பிடித்திருக்கிறது நிலாரசிகன்.

said...

Wow Nila!! :)

said...

அருமைங்க..,

said...

நன்றி வாசு,பேனாமூடி,நாளைப்போவான்.

said...

மூன்றாவது கவிதை மிக அருமை.வாழ்த்துக்கள் கவிஞரே.

said...

மூன்று கவிதைகளும் அருமையென்றாலும், இரண்டாவது அடர்த்தியாக்குகிறது. சிறகு என்பது வானத்தை விட எவ்வளவு பெரியது!

said...

moondru kavithaigalume super.

said...

அப்பா!..

மூன்றுமே அபாரமான கவிதைகள் நிலா!

இரண்டாவது கவிதைக்குத்தான் அந்த அப்பா!

said...

நன்றி மயில்ராவணன்,மாதவராஜ் அண்ணா,சுகுமார்,பா.ரா.

said...

............. :(

said...

2,3-m pidiththathu...

//இரண்டாவது கவிதைக்குத்தான் அந்த அப்பா//

!!

rajaram sir sonnathu polave.....:)