Sunday, February 14, 2010

நத்தையுடன் கழிந்த பொழுதுகள்




முதலில் அது நத்தை என்றே
எண்ணியிருந்தேன்.
பின்
சிறகுகள்
முளைக்கத்துவங்கியபோது
பட்டாம்பூச்சியோ என்று வியந்தேன்
ஆனால் அதுவொரு
சிட்டுக்குருவியை போலிருந்தது.
அறைக்குள் அங்குமிங்கும்
பறந்து
வினோத ஒலியெழுப்பியபடி
இருந்தது.
சற்று நேரத்தில் அறையெங்கும்
அதன் எச்சத்தால் நிரப்பிவிட்டு
கூரையை பிய்த்து எறிந்து பறந்து சென்றது.
இப்படித்தான் நிகழ்ந்தது உன்
வருகையும்
இருத்தலும்
பிரிதலும்.

15 comments:

said...

:).... Nice

said...

ந‌ல்லா இருக்கு நிலா

எச்சத்துக்கு பதில் சிறகுகள் எ‌ன்று எழுதி வாசித்தேன். காதலியின் ‌பி‌ரிவு இன்னும் மென்மையாக வந்தது

said...

அருமை.

said...

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே.

said...

kavithai Nalla Irukku NilaRaseegan....

//சற்று நேரத்தில் அறையெங்கும்
அதன் எச்சத்தால் நிரப்பிவிட்டு
கூரையை பிய்த்து எறிந்து பறந்து சென்றது.//

manam sudum varigal..
ithu varai naan engum padikatha uvamai... nandru.

kalaivani.

said...

க‌விதை ந‌ல்லா இருக்கு நிலார‌சிக‌ன்

said...

Very thoughtfull.....poem

Really liked it..

said...

நிலாரசிகன்... சில வரிகளில் அதிக உணர்வுகளையும், சேதிகளையும் சொல்லிட்டீங்க.. கவிதை நல்லயிருக்கு.

என்.விநாயகமுருகன் சொன்ன கருத்துடன் உடன்படுகிறேன்.
அது சிறகுகளாகவோ, அல்லது வேறு ஏதோவாகவோ இருந்திருக்கலாம். 'எச்சம்' தவிர.
:)

said...

un kavidhaikalin mouna rasigai naan.
mouna thirai kizhithu koovukirean...

yechaathil yedhenum micham irundhal.... kazhuvi vidu...

" nalla kavidhai nanbha"

said...

un kavidhaikalin mouna rasigai naan.
mouna thirai kizhithu koovugirean.

"yechchathin micham yedhenum irundhal... kazhuvi vidu..."

" kavidhai miga nandru nanba"

said...

நல்லாருக்கு நிலா :-)

said...

" சற்று நேரத்தில் அறையெங்கும்
அதன் எச்சத்தால் நிரப்பிவிட்டு
கூரையை பிய்த்து எறிந்து பறந்து சென்றது."

Pirivin valiyai unara seiginra varigal.

- Priya

said...

nice one but :(

said...

நல்ல கவிதை...

said...

nachchunnu irukku........:)

"yechchamnu"-yezhuthiyathil yenakku udanpaade...