Friday, February 19, 2010

நிலாத்துளிகள்



1.வாடாத மலர்கள் என்றொரு வலைப்பூவை துவங்கியிருக்கிறார்கள் எழுத்தாளர் மாதவராஜும்,வடகரை வேலனும். வாழ்த்துகளோடு விமர்சனமும் அனுப்பலாம்.

2.இனி அடிக்கடி ஈடன் காடர்ன்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி எதிர்பார்க்கலாம். இணைப்பாக  லஷ்மணனின் சதமும்,ஹர்பஜனின் சுழலும்.

3.வலைப்பதிவர் யோசிப்பவரின் “ஒரே ஒரு காலயந்திரத்தில்” சிறுகதை நூல் வாசித்தேன். சுஜாதாவிற்கு பிறகு அறிவியல் புனை கதைகளில் யோசிப்பவரின் பெயரும் இடம் பெறும் என்று சத்தியம் செய்தேன்.

4.கூகிள் பஸ்ஸ்(buzz) புஸ்வானமா சரவெடியா என்று இப்போது யூகிக்க முடியவில்லை. டுவிட்டர் அளவு நேரம்தின்னியாக இருக்குமென்று தோன்றவில்லை.

5.கேணி இலக்கிய சந்திப்பில் ஜெயமோகனின் பேச்சு பலரை கவர்ந்தது. இதுவரை நடந்த கூட்டத்திலேயே இதுதான் சிறந்ததொரு விவாதக் களமாக இருந்ததாக தோன்றுகிறது.

6.விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்களில் “தொலைதூரத்தில் வெளிச்சம் நீ” என்கிற வரியை ஏ.ஆர்.ரகுமான் தவிர வேறு யாராலும் இத்தனை உணர்வுபூர்வமாக பாடியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை. படம் அதிக ஆவலை தூண்டியிருக்கிறது.

7.கூகிள் அகராதி சேவையில் ஆங்கிலம் – தமிழ் அர்த்தம் அறிந்துகொள்ளலாம். சுட்டி : http://www.google.com/dictionary

8.ராஜா சந்திரசேகரின் இந்தக்  கவிதை அதிகம் கவர்ந்தது. வாசித்து முடித்தபின்னும் பின் தொடர்ந்துகொண்டே இருக்கிறது வயலின் இசை.

9.இம்மாதம் பதிவர் சிவராமன் அவர்களின் உலக திரைப்படம் திரையிடலுக்கு சென்றிருந்தேன். அவர் வாங்கித் தந்த தேநீர் போலவே படமும் இனித்தது.

10.அடலேறு வலைப்பக்கத்தில் நளினி ஜமீலாவின் நேர்காணல் மிக அற்புதம். இத்தனை இளம் வயதில் இப்படியொரு நேர்காணல் எடுக்க தோன்றியிருக்கிறதே அதற்காகவே அடலேறுவுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

-நிலாரசிகன்.

10 comments:

said...

துளிகள் அனைத்தும் அருமை...

said...

பழத்தை பிழிந்து சாரு எடுத்து தண்ணீர் சேர்க்காமல் "அப்படியே சாப்பிட்டது" போல் இருந்தது. அருமை.
haiyaa ! me first!

said...

Best of the Best...

said...

நன்றி சங்கவி,நாய்க்குட்டிமனசு,டி.வி.ஆர் ஐயா,உஷா.

said...

அருமை நிலா.

said...

Kalakkal NilaRaseegan...

Kalaivani.

said...

Nila,
Naan ninaithathu polave thaangalum "Tholai dhoorathil Velicham nee" patri ninaithu irukireergal.

Athuvum "velicham" endra vaarthaikku rahman koduthu irukkum azhuthamaana ucharippu migavum arumai. Manathai thodum varigal arumai.

Pagirthalukku nandri.

- Priya

said...

கேணி விழா பற்றி தனி பதிவு போடலாம்ல. விழாவில் பங்குபெறாத எங்களுக்கு உபயோகமா இருக்கும். நன்றி.

said...

//மயில்ராவணன் said...
கேணி விழா பற்றி தனி பதிவு போடலாம்ல. விழாவில் பங்குபெறாத எங்களுக்கு உபயோகமா இருக்கும். நன்றி.//

aamaam nila....

appuram..,

nathi-vayalin isai viththiyaasamaai irukku..

nathinaale sathangai thaan masil varum.

appuram...,

yellaam ok...!

said...

//ஏ.ஆர்.ரகுமான் தவிர வேறு யாராலும் இத்தனை உணர்வுபூர்வமாக பாடியிருக்க முடியுமா எனத் தெரியவில்லை//

"vellaip pookkal" (4m kannaththil muththamittaal)song-il naan unarnthen...

விண்ணைத்தாண்டி வருவாயா படம் அதிக ஆவலை தூண்டியிருக்கிறது

unmaithaan..... "directer" appadi.